அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய தலைவர் டிடிவி தினகரன் - தங்க தமிழ் செல்வன்
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய தலைவர் டிடிவி தினகரன் என்று தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: ஆள் பலம், படை பலம், பணபலத்தை மீறி டிடிவி தினகரன் ஜெயித்துள்ளதாக தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய தலைவர் டிடிவி தினகரன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக எங்கள் வசம் வரும். அதேபோல் இரட்டை இலை சின்னமும் எங்களிடம் வந்து சேரும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் வெற்றி அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வெற்றி ஆவணத்தை ஏற்படுத்தியுள்ளது போல அமைந்துள்ளது தங்க தமிழ்செல்வனின் பேட்டி.

சுயேட்சை ஜெயித்தது எப்படி
இந்த வெற்றி குறித்து கருத்து கூறியுள்ள தங்க தமிழ்செல்வன், உதயசூரியன், இரட்டை இலையை மீறி சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 40 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இரட்டை இலை சின்னத்தையும், உதயசூரியன் சின்னத்தையும் ஒரு சுயேட்சை சின்னம் வெற்றி பெற்றுள்ளது. இது டிடிவி தினகரனுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவைக் காட்டுகிறது.

மீறி ஜெயித்தோம்
ஆளுங்கட்சியின், பணபலம், படைபலம், ஆள் பலத்தை எதிர்த்து ஜெயித்தோமா இல்லையா? நாங்கள் பணப்பட்டுவாடா செய்யவில்லை. மக்கள் அதை எதிர்பார்க்கவும் இல்லை. அதிமுகவின் பணப்பட்டுவாடாவையும் மீறி நாங்கள் ஜெயித்துள்ளோம். விரைவில் அதிமுக எங்கள் வசம் வரும். அதேபோல் இரட்டை இலை சின்னமும் எங்களிடம் வந்து சேரும்.

எங்கள் பக்கம்தான்
ஆளுங்கட்சியை மீறி நாங்க ஜெயித்து விட்டோம். கட்சியும், ஆட்சியும் இனி எங்கள் பக்கம்தான் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வார்கள். தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

ஸ்லீப்பர் செல்கள்
எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் யாரையும் விரோதியாக பார்க்கவில்லை. எங்களுடன் சேர்த்து ஸ்லீப்பர் செல்கள் மொத்தம் 60 பேர் இருக்கிறார்கள். அமைச்சர்களும் எங்கள் பக்கம் வருவார்கள் என்று கூறினார் தங்க தமிழ் செல்வன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications