வள்ளியூரில் போலீசார் தாக்கியதாக கூறி பூச்சி மருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு.. உறவினர்கள் புகார்

நெல்லை: வள்ளியூரில் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியை போலீசார் தாக்கியதால்தான் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள வள்ளியூரில், உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த விவசாயி சக்திவேலிடத்திலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சக்திவேல் மது அருந்தியிருந்ததாகவும், அதனால் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பூச்சிகொல்லி மருந்து குடித்து சக்திவேல் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக சக்திவேலை ஏர்வாடி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். "என்னை போலீசார் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் பூச்சிமருந்து சாப்பிட்டேன்" என்று சக்திவேல் சிகிச்சையின்போது மருத்துவமனையில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சக்திவேல் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதாலேயே சக்திவேல் இறந்துவிட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!