For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலில் கலப்பட புகார்: தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பால் பரிசோதனை முகாம்!

பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆராய மதுரையில் பால் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆராய மதுரையில் பால் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் இதனை தொடங்கி வைத்தார்.

தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் குற்றம்சாட்டினார். பாலில் கலப்படம் செய்யப்படும் ரசாயனத்தால் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

The Milk Inspection Camp is set up in Madurai

அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலில் கலப்படம் செய்யபட்டுள்ளதா என்று ஆராய மதுரையில் ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் பால் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பேசிய அட்சியர், தமிழக அரசு மேற்கொண்ட இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த முகாமில் பாலை பரிசோதித்த பின்னர் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

English summary
The Milk Inspection Camp is set up in MaduraiThe Milk Inspection Camp is set up in Madurai to determine if the milk is contaminated. District Collector Vijay Raghavarav started this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X