வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி.. பின்னணியில் இருந்த மர்ம நபர் இவர்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி...வீடியோ

  சென்னை: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கி, பல கி.மீ தூரத்திற்கு ஏடிஎம்கள் முன்பாக மக்களை காத்திருக்க வைத்த பண மதிப்பிழப்பு அறிவிப்பு முடிவை பிரதமர் மோடி எடுக்க 9 நிமிட பிரசன்டேசன் ஒன்றுதான் காரணம்.

  கடந்த ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டையே பரபரப்பாக்கினார். கருப்பு பணத்தை மீட்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் பண மதிப்பிழப்பு மற்றும் வங்கி பரிவர்த்தனை உதவும் என்பது அரசின் கணிப்பாக இருந்தது.

  இவ்வாறு மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்ப காரணம், புனேவை சேர்ந்த பொருளாதார நிபுணரும், நிதி ஆலோசகருமான அனில் போகில்.

  9 நிமிடம் அப்பாயின்மென்ட்

  9 நிமிடம் அப்பாயின்மென்ட்

  கடந்த வருடம் நவம்பருக்கு சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட். ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

  ஆலோசனை வழங்கினார்

  ஆலோசனை வழங்கினார்

  அனில் போகில் 9 நிமிட பிரசன்டேசன் மூலம் பிரதமருக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இறக்குமதி வரியை தள்ளுபடி செய்யுங்கள். 56 வகை வரி விதிப்புகளை ரத்து செய்யுங்கள். ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமின்றி 100 ரூபாய் நோட்டுக்களையும் தடை செய்ய வேண்டும்.

  வங்கி தேவை

  வங்கி தேவை

  அனைத்து வகை பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் வழியாக, செக், டிடி மற்றும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும். வருவாய் வசூல் சிங்கிள் பேங்க் சிஸ்டம் மூலமாகவே நடைபெற வேண்டும். இதுபோன்ற ஐடியாக்களைத்தான் அனில் போகில் கொடுத்திருந்தார். இதன் விளைவுதான், பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

  கருப்பு பண ஒழிப்பு

  கருப்பு பண ஒழிப்பு

  இந்தியாவில் தினமும் சுமார் ரூ.2.7 லட்சம் கோடி பணம் புழங்குகிறது. அதில் 20 சதவீதம் மட்டுமே வங்கிகள் வாயிலாக நடக்கிறது. மற்றவை பணத்தின் மூலம் நடப்பதால் கருப்பு பணத்தை ஒழிக்க முடிவதில்லை. எனவே பண மதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழிக்க முதல்படியாக இருக்கும் என்பதே இந்த ஆலோசனையின் நிறைவில் ஒருமனதாக எடுத்த முடிவு. ஆனால், வங்கி அதிகாரிகள் முதல் நிதித்துறை அதிகாரிகள்வரை கை கோர்த்து செய்த மோசடிகளால், மக்கள் பாதிக்கப்பட்டனரே தவிர கருப்பு பண ஒழிப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  It was a nine minute presentation that convinced Prime Minister Narendra Modi to ahead with the decision on demonetisation. November 8 marks a year since the decision to ban the Rs 500 and 1,000 notes were taken.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற