நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் பலி
நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கோவைகுளத்தை சேர்ந்தவர் 40 வயதான செல்வம். கூலி தொழிலாளியாக பணியாற்றும் இவர் சில நேரங்களில் டிரைவர் வேலையையும் செய்து வந்தார்.

ஆனால் செல்வம் தினமும் மது அருந்துவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி செல்வம் மது போதையில் இருந்தபோது, நெல்லை சந்திப்பில் இருந்து கோவை குளம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார்.
அருகில் இருந்தவருடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் பேசியபடியே வந்துள்ளார். பேருந்து டக்கரம்மாள்புரம் அருகே சென்றுபோது திடீரென செல்வம் 'காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமையுங்கள்' என்று உரக்க கத்தியபடியே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்தார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு செல்வம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் செல்வம் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இளைஞர் ஒருவர் உயிரிழந்தால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் கூறிப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications