தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நிறுத்தம்.. ஜிஎஸ்டியால் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பாலான தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தால் கட்டணத்தில் வேறுபாடு இருக்கும் என்பதால் ஆன்லைன் புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி சட்டம் நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. நாளை முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுகிறது.

Theaters has stopped online ticket booking

தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 ரூபாய்க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், 100 ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ் வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் நாளைய காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. பல தியேட்டர்களில் முன்பதிவுக்கான கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

டிக்கெட்டுக்கான கட்டணம் நாளை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதால் கட்டணத்தில் மாற்றம் இருக்கும் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Theaters has stopped online ticket booking. GST is implementing tonight due to that theaters has stopped online reservation.
Please Wait while comments are loading...