நீட் விவகாரத்தில் நாடகமாடும் தமிழக அரசு- பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வுக்கும், பாஜக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 4,5 ஆண்டுகளாக தொடர்ந்து கௌரவ கொலைகள் நடைபெற்று வருகிறது. இவற்றை தடுத்திட வேண்டும்.

 There is no link between Neet and BJP, says Krishnasamy

தமிழகத்திற்கு சர்வதேச அளவில் பெரும் இழிவாக உள்ள இந்த கௌரவ கொலைக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் குரலெழுப்ப வேண்டும்.

தமிழக அரசியல் கட்சிகள் மாணவர்களை வைத்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள். நீட் தேர்விற்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என கூறிய காயத்ரி ரகுராம், நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்டகவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியபிறகும் அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இவர்கள் மன்னிப்பு கேட்க தவறினால் இழப்பீடு தொகையாக ரூ. 100 கோடி கேட்கப்படும்.

நீட் தேர்வு மசோதா தாக்கல் | No NEET exam for MBBS- Oneindia Tamil

தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடிகர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாது என கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puthiya tamilagam Krishnasamy says that there is no connection between neet exam and BJP. TN government has staged a drama.
Please Wait while comments are loading...