ஸ்தல விருட்ச மரம் பற்றி எரிந்த திருவாலங்காடு கோவிலில் பரிகார பூஜை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பற்றி எரிந்த ஸ்தல விருட்ச மரம்-வீடியோ

  அரக்கோணம்: பாடல் பெற்ற தலமான திருவாலங்காடு சிவன் கோவிலில் ஸ்தல விருட்ச மரம் திடீரென பறிந்த எரிந்ததால் இன்று கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.

  திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர். இக்கோவிலின் ஸ்தல விருட்சமான ஆலமரம் நேற்று பற்றி எரிந்தது.

  Thiruvalangadu Temple Admin conducts parihara pooja

  பக்தர்கள் நெய் தீபம், கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டபோதுதான் இந்த தீவிபத்து நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் திருவாலங்காடு சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

  இதையடுத்து இன்று காலை கோவில் நடை திறந்த போது தீ விபத்துக்காக பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. தமிழகத்தில் கோவில்கள் அடுத்தடுத்து தீ விபத்து நிகழ்வது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Thiruvalangadu Sri Vadaranyeswarar temple temple administration conducted parihara pooja for the fire incident.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற