என்னது ரெய்டு நடக்குதா? நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன் - திண்டுக்கல் சீனிவாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என்னது ரெய்டு நடக்குதா? நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன்-வீடியோ

  திண்டுக்கல்: ஜெயாடிவி, சசிகலா உறவினர் வீடுகளில் ரெய்டு நடப்பது பற்றி உங்க கருத்தை சொல்லுங்க என்று செய்தியாளர் கேட்டதற்கு நான் இப்பத்தான் தூங்கி எந்திருந்சேன் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி எஸ்கேப் ஆனார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

  காலை முதலே தமிழகம் பரபரப்படைந்துள்ளது. சசிகலா, டிடிவி தினகரன் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

  This is how Dindigul Srinivasan reacted to the news of Jaya TV raid?

  இன்று திண்டுக்கல்லில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எம்எல்ஏ விபிபி பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். எம்ஜிஆர் பிறந்தநாள் பற்றி பேட்டி அளித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
  ஆரம்பத்திலேயே பாரத பிரதமர் என்று ஆரம்பித்தார். பின்னர் சமாளித்து பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவரிடம், ஜெயாடிவியிலும், சசிகலா உறவினர் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், என்னது ரெய்டு நடக்கிறதா? அட நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன். இன்னும் டிவி எதுவும் பார்க்கலையே என்று கூறி விட்டு எஸ்கேப் ஆனார் அமைச்சர் சீனிவாசன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Dindigul Srinivasan has reacted to the news of Jaya TV raid and said that he was not aware of that.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற