பக்காவாக பிளான் செய்து நடத்தப்பட்ட ரெய்டு... 1000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஒரு குடும்பத்துக்கு எதிராக மொத்தமாக களம் இறக்கப்பட்ட வருமான வரித்துறை..வீடியோ

  சென்னை: சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்படும் ஐடி ரெய்டானது கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

  வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தினகரன் குடும்பத்திற்கு சொந்தமான ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் குடைந்து குடைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

  தினகரனின் செயல்பாடுகளை முடக்குவதற்காக பாஜக அரசு மேற்கொண்ட ரெய்டு என்று தினகரன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது.

   மாபெரும் ரெய்டு

  மாபெரும் ரெய்டு

  சென்னை, பெங்களூர், மன்னார்குடி, கூடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 190 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல்முறையாக 190 இடங்களில் அதுவும் ஒரே நேரத்தில் சோதனை நிகழ்த்துவது என்பது இதுதான் என்று கூறப்படுகிறது.

   யார் வீடுகளில்...

  யார் வீடுகளில்...

  ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகங்கள், ஜாஸ் சினிமாஸ், தினகரனுக்கு சொந்தமான புதுவை பண்ணை வீடு, திவாகரனுக்கு சொந்தமான மன்னார்குடி கல்லூரி மற்றும் வீடு, விவேக்கின் வீடு, இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீடு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமாரின் வீடு என ஏராளமான இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுகிறது.

   மிகப் பெரிய சோதனை

  மிகப் பெரிய சோதனை

  மேற்கண்ட 190 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த 1500 முதல் 2000 அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

   தற்போது எக்சிகூஷன்

  தற்போது எக்சிகூஷன்

  சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்த இந்த ரெய்டு சில காரணங்களுக்காக சற்று தாமதமாக இன்று நடைபெறுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  IT officials who are conducting raids in Sasikala's relatives and supporters house is already planned few months ago.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற