For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருத்தணி அருகே சட்டவிரோதமாக நரி வால் விற்ற 2 பேர் கைது

Google Oneindia Tamil News

திருத்தணி: சட்டவிரோதமாக நரி வால் விற்ற இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் திருத்தணி வனத்துறையினர்.

திருத்தணி பகுதியில் சட்டவிரோதமாக நரி வால் விற்கப் படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து திருத்தணி பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பல இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Tirutani: Two held for selling fox tail

அப்போது, திருத்தணி ம.பொ.சி. சாலையில் இரண்டு பேர் நரி வால் விற்றுக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்த வனத்துறையினர், அவர்களை திருத்தணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் திருத்தணி-அரக்கோணம் சாலையில் பஸ் டெப்போ அருகில் உள்ள நரிக்குறவர் பகுதியை சேர்ந்த ரவி (50) மற்றும் குமார் (55) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து 4 நரிவால்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.

தொடர்ந்து இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In Tirutani the forest officials have caught two persons, who were selling fox tail. They were surrendered to police and remanded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X