சட்டசபைக்கு வர கருணாநிதிக்கு விலக்கு கோரிய தீர்மானம் நிறைவேற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நிலையால் கருணாநிதி சட்டசபைக்கு வர விலக்கு கோரும் தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டுவந்தார். அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ச்சியாக சட்டசபை உறுப்பினர் ஒருவர் சட்டசபைக்கு வராமல் இருப்பது அவரை தகுதியிழக்கச் செய்துவிடும் என்பதால், திமுக சார்பில், மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை இன்று கொண்டுவந்தார்.

TN assembly exempts Karunanidhi from participating assembly proceedings

ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆளும் அதிமுக உட்பட அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளித்தனர். இதையடுத்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, நடைபெற்றபோதும் கருணாநிதி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலிலும் அவர் வாக்களிக்கவரவில்லை.

Karunanidhi gets special seat arrangement in Tamil Nadu Assembly | Oneindia News

இந்த நிலையில் திமுக தீர்மானம் கொண்டுவந்து கருணாநிதிக்கு விலக்கு பெற்றுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu assembly today exempted to the DMK President Karunanidhi from the participating assembly proceedings.
Please Wait while comments are loading...