குணமடைந்தார் சபாநாயகர் தனபால்.. அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சபாநாயகர் தனபாலுக்கு காய்ச்சல், மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார்.

 Tn assembly speaker Dhanapal discharged from hospital

சபாநாயகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தனபாலைச் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, தனபாலின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது.

தனபால் இல்லாததால், நேற்றும் இன்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அவைக் கூடியது. இந்நிலையில், உடல்நிலை சீரானதால் தனபால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது வீடு திரும்பியுள்ள தனபால், நாளை சட்டசபை நிகழ்வில் கலந்துகொள்வாரா என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu assembly speaker Dhanabal discharged today as his health condition stabilized
Please Wait while comments are loading...