For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செந்தூர் முருகன் கோயில் வெளிபிரகாரம் முழுமையாக இடித்து புதிதாக கட்டப்படும்: அமைச்சர் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி- வீடியோ

    தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வெளிப்பிரகாரம் அனைத்தையும் இடித்து புதிதாக கட்டப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பரிகார மண்டபம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து மண்டப இடிபாடுகள் அகற்றப்பட்டன. கோயில் நடை சாத்தப்பட்டு, சில பரிகார பூஜைகளுக்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    TN Government will rebuild Tiruchendur Temple's outer hall: Sevur Ramachandran

    இந்த நிலையில், திருச்செந்தூருக்கு, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

    விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிபன்னர், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி:

    கோவில்களை புனரமைக்க 12 வருடங்களுக்கு முறை குடமுழுக்கு நடத்தப்படுகின்றது. இருப்பினும், இந்த பிரகார மண்டபம் கடல் ஓரம் இருப்பதால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வெளிப்பிரகாரம் அனைத்தையும் இடித்து புதிதாக கட்டப்படும். திருச்செந்தூர் கோவில் விபத்து குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu Government will rebuild compleately Tiruchendur Temple's outer hall, says minister Sevur Ramachandran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X