For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வண்டி 10 நிமிஷம் நிக்கும்.. டீ, காப்பி சாப்பிடறவங்க "அம்மா மோட்டல்"ல சாப்பிட்டுக்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஊருக்குப் போகும் போதெல்லாம் அந்த "விக்கிரவாண்டி ஹோட்டலில்" குண்டாங்குறையான விலையில் விற்கும் சாப்பாட்டை (சுற்றிலும் மூத்திர வாடை வேற) சாப்பிட வேண்டியுள்ளதே என்று அலுத்துக் கொள்ளும் பயணியா நீங்க.. கவலைப்படாதீங்க பாஸ்.. உங்களுக்காகவே விரைவில் "அம்மா மோட்டல்" வரப் போகிறது, தைரியமா இருங்க.

அம்மா உணவகம் என்ற பெயரில் மாநகரங்களில் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்கிறது தமிழக அரசு. இந்த உணவங்கள் மிகப் பிரபலமாக திகழ்கின்றன. இந்த வரிசையில் விரைவில் வரப் போகிறது அம்மா மோட்டல்.

நெடுஞ்சாலைகளில் பொதுமக்களுக்கு சகாயமான விலையில் தரமான சாப்பாடு கிடைப்பது என்பது மிகப் பெரிய சோதனையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த அம்மா மோட்டல் திட்டத்தை கையில் எடுக்கிறது தமிழக அரசு.

வழியெங்கும் மோட்டல்கள்.. !

வழியெங்கும் மோட்டல்கள்.. !

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் வழியெங்கும் மோட்டல்களைப் பார்க்கலாம். தனியார்கள் நடத்தி வரும் இந்த மோட்டல்களில் ஏதாவது ஒன்றில்தான் நாம் பயணிக்கும் பஸ்கள் பிரேக்குக்காக நிறுத்தப்படும். அங்கு விலை தாறுமாறாக இருக்கும், சுவை இருக்காது, வயிறையும் பதம் பார்த்து விடும் உணவுகளைத்தான் தருவார்கள்.

டிரைவர் - கண்டக்டருக்கு மட்டும் ப்ரீ!

டிரைவர் - கண்டக்டருக்கு மட்டும் ப்ரீ!

இந்த உணவகங்களில் டிரைவர், கண்டக்டர்களுக்கு மட்டும் எதை சாப்பிட்டாலும் இலவசம் என்பதால் அவர்களும் அதே ஹோட்டல்களில்தான் திரும்பத் திரும்ப நிறுத்துகிறார்கள். இதனால் அந்த ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களை விட அங்கு போடப்படும் (நடு ராத்திரி 1 மணிக்குக் கூட இளையராஜா பாட்டை இங்கு கேட்கலாம்) பாட்டைக் கேட்டு ரசிக்க பஸ்ஸை விட்டு இறங்குவோரும், "பிஸ்" அடிக்க இறங்குவோரும்தான் ஜாஸ்தி.!

அடாவடி வேறு

அடாவடி வேறு

இதில் அங்கு சிறுநீர் கழிக்கச் செல்வோர்தான் பெரும் பாடு பட வேண்டி வரும். 'உச்சா'வுக்கு 5 ரூபாய் வரை வாங்குகிறார்கள். டபுள்ஸ் என்றால் ரேட்டும் டபுள். சாலையோரமாக போய் ஒதுங்கப் போவோரை குச்சியை வைத்து விரட்டும் ஹோட்டல் காரர்களும் உண்டு. பெரிய அக்கப் போர் இந்த பஸ் பயணம் என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு நிலைமை உள்ளது.

விரைவில் விமோச்சனம்

விரைவில் விமோச்சனம்

இந்த நிலையில் இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் அம்மா மோட்டல் என்ற பெயரில் அரசே நெடுஞ்சாலைகளில் உணவகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாம். குறைந்த விலையில் இங்கு உணவுகள் விற்கப்படுமாம்.

பக்கா வசதிகளுடன்

பக்கா வசதிகளுடன்

உணவகமாக மட்டும் இல்லாமல், கழிப்பறை, குளியலறை என சகல வசதிகளுடன் கூடியதாக இந்த மோட்டல்கள் அமைக்கப்படவுள்ளதாம். இதுகுறித்து விவாதிக்கப்பட்டும் வருகிறதாம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் இதை நிர்வகிக்கவும் அரசு யோசித்து வருகிறதாம்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

விரைவில் இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் அரசு மட்டத்தில் உள்ளது. ஆமாம்மா.. சீக்கிரமா முடிவெடுங்க.. அட்டகாசம் செய்யும் தனியார் மோட்டல்களின் கொட்டத்தையும் அடக்குங்க!

English summary
TN govt is planning for establishing Amma motels along the highways in the state on the lines of Amma unavagam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X