நிதியமைச்சர் ஜெயக்குமாரின் முதல் பட்ஜெட்.. புது வரிகள் ஏதுமில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட் இது. இதில் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் எந்த புதிய வரிகளும் விதிக்கப்படவில்லை.

பட்ஜெட் துளிகள்:

-பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் ஜெயக்குமார்

-சட்டசபை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

-மாற்றுத் திறனாளிகளுக்கான இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு

-ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ளதால் வரிச்சலுகை அறிவிப்பு இல்லை

-10,000 மாற்று திறனாளிகளுக்கு உயர்தொழில்நுட்ப ஊன்றுகோல்கள்

-வருவாய் பற்றாக்குறை ரூ15,930 கோடி

-பிறமாநில தொழிலாளர் தங்க வாடகை குடியிருப்புகள் கட்டப்படும்

-மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டம் எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு

-தொழிலாளர் நலத்துறைக்கு ரூ1,010 கோடி நிதிஒதுக்கீடு

-சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு

-பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை

-உயர்கல்வி துறைக்கு ரூ.3680 கோடி ஒதுக்கீடு

-மாணவர் இலவச திட்டங்களுக்கு ரூ1,503 கோடி ஒதுக்கீடு

-மகளிர் ஸ்கூட்டர் வாங்க ரூ200 கோடி நிதி ஒதுக்கீடு

-இலவச லேப்டாப் வழங்க ரூ758 கோடி ஒதுக்கீடு

-150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

-100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

-மாணவர்களுக்கான இலவச பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும்

-சுகாதாரத்துறைக்கு ரூ10,158 கோடி ஒதுக்கீடு

-மகப்பேறு உதவி திட்ட நிதி உதவி ரூ12,000-ல் இருந்து ரூ18,000 ஆக அதிகரிப்பு

-முதல்வர் காப்பீடு திட்டத்துக்கு ரூ1,348 கோடி ஒதுக்கீடு

-குறைந்தவிலையிலான பொது மருந்து கடைகள் அமைக்கப்படும்

-ரூ420 கோடியில் 20,000 பசுமை வீடுகள் கட்டப்படும்

-மகப்பேறு உதவி திட்டத்துக்கு ரூ1,001 கோடி ஒதுக்கீடு

-அதிமுக எம்.எல்.ஏ.க்களே பட்ஜெட்டை வேகமாக படிக்க வலியுறுத்தல்

-பட்ஜெட்டை வேகமாக ஜெயக்குமார் படித்ததால் முகம் சுளித்த ஓபிஎஸ்

-பட்ஜெட்டை முன்வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார்

-பட்ஜெட்டை திடீரென மிகவேகமாக வாசித்தார் ஜெயக்குமார்

-கடனுக்கு படிப்பதைப் போல படிக்க தொடங்கினார் ஜெயக்குமார்

-மருத்துவ படிப்பு இடங்கள் 1,188-ல் இருந்து 1,362 ஆக அதிகரிப்பு

-இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும்

-100 நாள் வேலைதிட்டம்- தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

-100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்வு

-இலவச வேட்டி சேலைக்கு ரூ490 கோடி ஒதுக்கீடு

-மதுரை, சேலம், திருச்சியில் தொழில் ஊக்குவிப்பு மையம்

-பட்ஜெட்டை புறக்கணித்த 3 அமைச்சர்கள்

-சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் சபையில் இல்லை

-தம்பிதுரையுடன் 3 அமைச்சர்கள் டெல்லியில் முகாம்

-பட்ஜெட் உரையின் போது துறை அமைச்சர்கள் இல்லாததால் எம்.எல்.ஏ.க்கள் முனுமுணுப்பு

-தொழில்துறைக்கு மொத்தம் ரூ2,088 கோடி ஒதுக்கீடு

-ஐடி வளர்ச்சிக்கு ரூ116 கோடி ஒதுக்கீடு

-காஞ்சி, கரூரில் ஜவுளி குழுமம் அமைக்கப்படும்

-தருமபுரியில் உணவுப் பொருள் குழுமம் அமைக்கப்படும்

-ரூ5 கோடியில் உதகையில் நகரக விற்பனை கண்காட்சி திடல்

-ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு பொருள் உற்பத்தி மையம்

-ராமேஸ்வரத்தில் கடல் உணவுப் பொருள் குழுமம் அமைக்கப்படும்

-சோழிங்கநல்லூரில் புதிய தொழில்நுட்ப பூங்கா

-மென்பொருள் ஏற்றுமதி ரூ1,00,300 கோடியை எட்டும்

-1000 கிராம கோயில்களை புதுப்பிக்க திட்டம்

-கோயில் ஒன்றுக்கு ரூ1 லட்சம் நிதி உதவி

-கோயில்கள் அன்னதான திட்டம் தொடரும்

-காஞ்சிபுரத்தில் ரூ130 கோடியில் மருத்துவ பூங்கா

-107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்

-போக்குவரத்து துறைக்கு ரூ2192 கோடி ஒதுக்கீடு

-100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும்

-உபரி காற்றாலை மின்சாரத்தை வெளிமாநிலத்துக்கு விற்ப புதிய வழித்தடம்

-உலக முதலீட்டாளர் மாநாட்டு நடத்த ரூ75 கோடி நிதி ஒதுக்கீடு

-உதய் திட்டப்படி மின்வாரிய கடனில் 75% அரசு ஏற்கும்

-உதய் திட்டத்தில் சேர்ந்ததால் கடனின் வட்டி சுமை குறையும்

-4778 ஏரிகள், 477 அணைக்கட்டுகள் சீரமைக்கப்படும்

-சென்னை புறநகர் சாலை திட்டங்களுக்கு ரூ744 கோடி ஒதுக்கீடு

-ரூ3,100 கோடியில் புதிய பாலங்கள், சாலை அகலப்படுத்தும் பணி

-மின்சுயசார்பு நிலையை எட்டியது தமிழகம்

-நெடுஞ்சாலை துறைக்கு ரூ10,067 கோடி ஒதுக்கீடு

-நீர்வள ஆதார துறைக்கு ரூ4,500 கோடி

-அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு

-தாமிரபரணி- நம்பியாறு இணைப்பு பணிகள் தொடரும்

-தாமிரபரணி- நம்பியாறு இணைப்புக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

-அணைகள் மேம்பாடு, புனரமைக்கு ரூ350 கோடி ஒதுக்கீடு

-குடிமராமத்து பணிக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு

-சுற்று சூழல், வனத்துறைக்கு ரூ567 கோடி ஒதுக்கீடு

-பசுமை திட்டத்துக்கு ரூ88 கோடி ஒதுக்கீடு

-நாட்டு மரங்கள் நடுவது ஊக்கப்படுத்தப்படும்

-ரேஷன் கடையில் மானிய விலையில் பருப்புகள் தொடர்ந்து வழங்கப்படும்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNAdu government will present the budget on Thursday.
Please Wait while comments are loading...