தமிழக உளவுத்துறை ஐஜியாக மீண்டும் சத்தியமூர்த்தி நியமனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக உளவுத்துறை ஐஜியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் திடீரென விடுப்பில் சென்றார். பின்னர் தொடர்ந்து விடுப்பில் இருந்து வந்தார்.

TN govt reappoints Sathiyamurthy as intelligence chief

இதையடுத்து பாதுகாப்பு பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி அப்பொறுப்புகளை கூடுதலாக பார்த்து வந்தார். இந்த நிலையில் சத்தியமூர்த்தி திடீரென மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். மேலும் சத்தியமூர்த்திக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது உளவுத்துறை ஐஜியாக மீண்டும் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu Government reappointed Sathiyamurthy as the Intelligence chief.
Please Wait while comments are loading...