For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களிடமோ, வெளிநாட்டு நூலகங்களிலோ 17,18,19-ம் நூற்றாண்டு தமிழ் நூல்கள் இருக்கிறதா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தங்களிடமோ, வெளிநாட்டு நூலகங்களிலோ கி.பி. 17,18,19-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய நூல்கள் இருந்தால் தெரிவிக்குமாறு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கிடைக்கப்பெறாத வெளிநாட்டு நூலகங்களில் உள்ள அரிய தமிழ் நூல்களை மின் எண்மத்தில் (DIGITIZE) பதிவு செய்து நூலாக வெளியிடும் பணி ரூ1.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அவ்விறிப்பிற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையில், தமிழகத்தில் கிடைக்கப்பெறாத வெளிநாட்டு நூலகங்களில் உள்ள, அரிய தமிழ் நூல்களைத் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே 17,18.19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நூல்கள் பொதுமக்களாகிய தங்களிடம் ஏதேனும் இருப்பின் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு கொடுத்து உதவுமாறு அல்லது விவரம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் (முதல் தளம்), ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை- 8. தொலைபேசி:: 28190412, 28190413

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Govt. seeks rare books collection for digitisation from Other countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X