For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மாவின் ஆணைக்கிணங்க.... தமிழக அமைச்சர் அளித்த நிவாரண உதவிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பெரு மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து உடமைகளை இழந்து நிவாரண முகாம்களிலும், சாலையோரங்களிலும் தங்கியிருக்கும் மக்களுக்கு மாண்புமிகு முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க தமிழக அமைச்சர்கள் ஆங்காங்கே நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். புடவைகள், போர்வைகள், சுடச்சுட உணவுகளையும் பரிமாறுகின்றனர் அமைச்சர்கள்.

அரசு உதவியை மட்டுமே நம்பியிருக்காமல் தனியார்நிறுவனங்களும், தொண்டு நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும், பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அமைச்சர்களும், அதிமுகவினரும் உணவுகளையும், நிவாரண பொருட்களையும் ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.

அமைச்சர்கள் நிவாரண பொருட்கள்

அமைச்சர்கள் நிவாரண பொருட்கள்

வடசென்னை தெற்கு மாவட்டம் எழும்பூர் தொகுதி 107வது வார்டில் உள்ள அப்பாராவ் தோட்டம் அவ்வைபுரம் ஆகிய கூவம்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர்கள் நத்தம் இரா.விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, எஸ்.கோகுலஇந்திரா, வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார், ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அமைச்சர் வளர்மதி

அமைச்சர் வளர்மதி

109வது வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமச்சிவயபுரம் பகுதி பொதுமக்களுக்கு கவுன்சிலர் புஷ்பாநகர் ஆறுமுகம் ஏற்பட்டில் புடவை ,பத்திரங்கள், பால்பவுடர், பிஸ்கேட், தண்ணீர்பாட்டால் ஆகிய பொருட்களை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

புறநகர் பகுதிகளில் நிவாரணம்

புறநகர் பகுதிகளில் நிவாரணம்

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் நகராட்சி, மேறகு தாம்பரம் முத்துலிங்க ரெட்டி தெருவிலுளள டாக்டர் அம்பேத்கார் நகராட்சி திருமண மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பால் பவுடர், ரொட்டி, வேட்டி, துண்டு, பாய், போர்வை, கைலி, நைட்டி, சோப்பு, ஷாம்பு, டீத்தூள், சானிடரி நாப்கின் உளளிட்ட நிவாரணப் பொருட்களை முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின் படி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமனறங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

முடிச்சூரில் நிவாரணம்

முடிச்சூரில் நிவாரணம்

முடிச்சூர் ஊராட்சி குருசேகரபுரம் சி.எஸ்.ஐ. ஆலய முகாமில் லட்சுமி நகர், ராயப்பா நகர், நேதாஜி நகர், அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுளள மக்களுக்கு பாய், போர்வை, நைட்டி, துண்டு, உணவு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை அமைச்சர்கள் வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

நிலவேம்பு கசாயம்

நிலவேம்பு கசாயம்

சுகாதார துறையின் மூலம் அமைக்கப்பட்டுளள சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு அமைச்சர்கள் பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டு, முகாமில் தங்கியிருந்த பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீரை வழங்கினர்.
பெருங்களத்தூர் பேரூராட்சி புதிய பெருங்களத்தூர் ஏரிகரை வெள்ளத்தால் சுமார் 40 அடி நீளத்திற்கு திடீர் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

நிவாரணம் அளித்த ஓ.பி.எஸ்

நிவாரணம் அளித்த ஓ.பி.எஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி.கே.பழனிச்சாமி, பி.வி.ரமணா, வணிகவரி மற்றும் பத்திரபதிவுத் துறை முதன்மை செயலர், மாவட்ட வெள்ள நிவாரண உதவிக்கான ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.பிரபாகரன், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் நிவாரண பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்கள்.

165குடும்பங்களுக்கு உதவி

165குடும்பங்களுக்கு உதவி

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைநீரால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம், மருத்துவம் மற்றும் உணவு பொருட்கள் சிறப்பாக வழங்கப்பட்டு வருவதை தொடர்ந்து திருவொற்றியூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 165 குடும்பங்களை சேர்ந்த 663 நபர்களுக்கு வேட்டி, சேலை, ரொட்டி, பால்பவுடர், சானிடரி நாப்கின், குழந்தைகளின் டையப்பர், வாழைப்பழம் முதலியவற்றை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.

அம்பத்தூர், ஆவடியில் நிவாரணம்

அம்பத்தூர், ஆவடியில் நிவாரணம்

அம்பத்தூர் வட்டம், பாடிகுப்பம் சென்னை நடுநிலைப் பள்ளியில் 370 நபர்களுக்கு நிவாரணம் மற்றும் உணவு பொருட்களை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வழங்கியதுடன், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், விச்சூர் ஊராட்சி, வெள்ளங்குளம் பகுதியில் சேதமடைந்த வீடுகள் மற்றும் சாலைகளை பார்வையிட்டு அதனை சீர் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார். ஆவடி நகராட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

English summary
TN Ministers O Panneerselvam, Gokula Indira, Sellur Raju, Edappadi Palanisamy have Visited flood hit area and distributed relief materials in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X