மக்கள் முதல்வர் வழிகாட்ட தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ள ஆய்வுக்கூட்டம்
சென்னை: வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் தலைமைச்செயலகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நடுநாயகமாக மக்கள் முதல்வரின் படம் இந்த ஆய்வுக்கூட்டத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த ஆய்வுக்கூட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று (13.11.2014) சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவற்றை சீர் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மழைநீர் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்காத வகையில் மழை நீர் வடிகால்களை தூர் வாருதல் பணிகள் குறித்தும், பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்தும், தொற்று நோய் பரவாமல் தடுக்க அமைக்கப்பட்ட மருத்துவ முகாம்களின் செயல்பாடுகள் குறித்தும், அனைத்து மண்டலங்களிலும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக எடுக்கப்படும் பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற கிருமி நாசினிகள் தெளித்தல் குறித்தும், கொசு தடுப்பு நடவடிக்கையாக கொசு புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் குறித்தும், மாநகராட்சியால் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாநகராட்சிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், தாய் சேய் நல இல்லங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், வணக்கத்திற்குரிய சென்னை மாநகராட்சி மேயர் திரு சைதை துரைசாமி, துணை மேயர் திரு பெஞ்சமின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர்,இ.ஆ.ப., இணை ஆணையர் திரு விஜய் பிங்ளே,இ.ஆ.ப.,துணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications