For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: தமிழகம், புதுவையில் நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் மே 16-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று தொடங்குகிறது.

வேட்பாளர்கள் 22-ந் தேதியில் இருந்து 29-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ந் தேதி நடைபெறுகிறது.

TN polls:Filing of nomination begins on Friday

வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 2-ந் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு மே 16-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ந் தேதியும் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைகிறது.

இதில் பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதியில் போட்டியிடலாம். அதே போல் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ஒரு தொகுதியில் 4 வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அதே போன்று 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

English summary
Filing of nominations will begin from Friday for the TN and Pudhucherry Assembly constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X