தக்காளி விலை பாதியாக குறைப்பு... இனி திண்டுக்கல் மக்கள் தக்காளி சட்னி, தக்காளி சாதம் சாப்பிடலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தக்காளியின் உற்பத்தி அதிகரித்ததால் ரூ.100-ஆக விற்கப்பட்ட அதன் விலை ரூ.50 -ஆக குறைக்கப்பட்டது.

தக்காளியின் வரத்து குறைந்ததால் இதன் விலை ரூ.120 வரை விற்கப்பட்டது. மேலும் தக்காளியை திருடும் அச்சத்தால் மார்க்கெட்டுகளில் தக்காளி பெட்டிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அளவுக்கு அதன் விலை விண்ணை முட்டியது.

Tomato price less due to productivity

நாடு முழுவதும் இந்த விலையேற்றத்தால் மக்கள் அவதியடைந்தனர். சமையலுக்கு தக்காளி அத்தியாவசியம் என்பதால் மக்களும் தங்களால் இயன்ற அளவுக்கு சிக்கனமாக பயன்படுத்தி வந்தனர்.

தமிழக சட்டசபையில் தக்காளியின் விலையேற்றம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 விற்கப்பட்டிருந்த நிலையில் தக்காளியும் விலை ஏறியதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

என்னதான் விலை குறைந்துவிட்டது என்றாலும் தக்காளி குறைந்தபட்சம் ரூ.87-க்கு விற்கப்பட்டது. தங்கத்தை போன்று தக்காளியும் விலையுயர்ந்த பொருளாக மாறிவிட்டது.

1 Kg Tomato rs.80 and 1 Kg onion rs.60-Oneindia Tamil

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தக்காளி வரத்து அதிகரித்ததால் ரூ. 100-ஆக விற்கப்பட்ட தக்காளி பாதியாக குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As Tomato production goes high, so the price of that one is reduced to half of the price in Dindigul District.
Please Wait while comments are loading...