முந்தைய ஒப்பந்தம் முடிந்த தேதியில் இருந்து நிலுவைத் தொகையை கேட்டுள்ளோம்: தொ.ச வக்கீல் அய்யாதுரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முந்தைய ஒப்பந்தம் முடிந்த தேதியில் இருந்து நிலுவைத் தொகையை கேட்டுள்ளதாக தொழிற்சங்களின் வக்கீல் அய்யாதுரை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்து மத்தியஸ்தர் விசாரிப்பார் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்ததை அடுத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

Transport trade unions asked to pay the amount from the date of the previous contract: Ayyaddurai lawyer

இதற்கிடையே மத்தியஸ்தர் நியமனத்தை தொடர்ந்து 8 நாட்களாக நடந்து வந்த போராட்டம் இன்றே முடிவுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அய்யாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டதை வரவேற்பதாக கூறினார். மேலும் முந்தைய ஒப்பந்தம் முடிந்த தேதியில் இருந்து நிலுவைத் தொகையை கேட்டுள்ளதாக தொழிற்சங்களின் வக்கீல் அய்யாதுரை தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவு குறித்து தொழிற்சங்க தலைவர்கள் ஆலோசிப்பதாகவும் வழக்கறிஞர் அய்யாதுரை தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Transport trade unions lawyer has said that they have asked to pay the amount from the date of the previous contract in Chennai high court.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற