ஈபிஎஸ் ஐ விட ஓபிஎஸ் பரவாயில்லையே.. ஆதரவாளர்களிடம் டிடிவி தினகரன் ஆதங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ.பன்னீர் செல்வமே தேவலை போல இருக்கே என்ற நிலைக்கு வந்து விட்டாராம் டிடிவி தினகரன். காரணம் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் கொடுக்கும் குடைச்சல்தான்.

முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து விட்டு முதல்வராக நினைத்தார் சசிகலா. ஆனால் விதி யாரை விட்டது. அவர் அரியணை ஏற நினைத்தார், ஆனால் சிறைக்கு போனார்.

தனக்கு பதிலாக தனது அக்காள் மகனாவது கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தட்டும் என்று தினகரனை நியமனம் செய்தார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை.

பிளவுபட்ட அதிமுக

பிளவுபட்ட அதிமுக

கட்சியில் கலகக்குரல் எழுப்பினார் ஓபிஎஸ். தனக்கென ஓரு ஆதரவு வட்டத்தை உருவாக்கினார். கட்சி இரண்டானது. உடனே எம்எல்ஏக்களை கூவத்தூருக்கு கடத்தி கொண்டு போய் வைத்துக்கொண்டு, ஒரே குடும்பமாக பேசி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர். அங்கேதான் உருவானது சிக்கல்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் வரை டிடிவி தினகரன் சொன்னதை எல்லாம் கேட்டு அதன்படி நடந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் கொங்கு மண்டல அமைச்சர்களும், முதல்வரும் படிப்படியாக தங்களின் பலத்தை அதிகரித்துக்கொண்டனர்.

சிறைக்கு போன டிடிவி தினகரன்

சிறைக்கு போன டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறைக்கு போனார் டிடிவி தினகரன். இதனையடுத்து தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

தனக்கென ஒரு ஆதரவு எம்எல்ஏக்கள் வட்டத்தை வைத்துக்கொண்டுள்ள டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உள்ளே இருந்து கொண்டே குடைச்சல் கொடுத்து வருகிறார்.

ஓபிஎஸ் பரவாயில்லையே

ஓபிஎஸ் பரவாயில்லையே

ஈபிஎஸ் உடன் ஒப்பிடும் போது ஓபிஎஸ் பரவில்லைப்பா என்று தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம் தினகரன். நாம சொன்னதை எல்லாம் தட்டாம கேட்டு செய்தார். முதல்வர் பதவியை பறிச்ச பிறகுதான் அவருக்கு கோபம் வந்தது. மறுபடியும் ஓபிஎஸ் ஐ முதல்வராக்கலாமா என்றும் கூறியுள்ளாராம்.

ஒபிஎஸ் ஒத்துக்கொள்வாரா?

ஒபிஎஸ் ஒத்துக்கொள்வாரா?

கட்சியை இணைக்க உருவாக்கப்பட்ட குழுவையே கலைத்து விட்டவர் ஓ.பன்னீர் செல்வம். காரணம் தமிழகம் முழுக்க சசிகலா குடும்பத்திற்கு எதிராக வீசும் அலைதான். அதிமுகவில் சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கினால் மட்டுமே இணைப்பு பேச்சுவார்த்தை என்று கூறி வந்தவர் ஓபிஎஸ். இப்போது மீண்டும் முதல்வராக அறிவிக்கிறோம் என்ற தினகரன் குடும்பத்தினர் கூறினால் அதற்கு ஒத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீண்டும் முதல்வர் ஓபிஎஸ்

மீண்டும் முதல்வர் ஓபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமி மீதும், கொங்கு மண்டல அமைச்சர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கும் தினகரன், ஈபிஎஸ்ஐ பதவியில் இருந்து இறக்கிவிட்டு மீண்டும் ஓபிஎஸ் ஐ மீண்டும் முதல்வராக்கலாமா என்று யோசித்து வருகிறாராம்.

சமாதியில் தியானம்

சமாதியில் தியானம்

ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்யச் சொன்னதால் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து கட்சியை உடைத்தவர் ஓபிஎஸ். இப்போது ஈபிஎஸ்ஐ பதவியை விட்டு விலகச் சொன்னால் அவரும் தனது ஆதரவாளர்களுடன் சமாதியில் தியானம் செய்ய போனால் என்ன செய்வது என்பதும் யோசனையாக இருக்கிறது. எல்லாம் ஜனாதிபதி தேர்தல் வரைதான் அதன்பிறகு எதுவும் நடக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran compare to EPS and OPS.Sources said Dinakarn new plan the rebel leader O Panneerselvam as the chief minister while current CM E K Palaniswami.
Please Wait while comments are loading...