இவங்களா வச்சு எடுத்தாதான் உண்டு.. ரணகளத்திலும் தினகரன் செம கலாய்!
புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள பண்ணை வீட்டில் இவர்களாக எதையாவது வைத்து விட்டு எடுத்தால்தான் உண்டு என்று தினகரன் கலாய்த்துள்ளார்.
Recommended Video

சென்னை: புதுவையில் எனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் எதுவும் கிடையாது. அதிகாரிகளாக எதையாவது வச்சு எடுத்தால்தான் உண்டு என்று டிடிவி தினகரன் ரெய்டு குறித்து கலாய்த்துள்ளார்.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான 190 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் ரெய்டும் என்றும் வீட்டில் கோபூஜை செய்து வருகிறார் என்றும் செய்திகள் பரவின.

இந்த நிலையில் தனது அடையாறு வீட்டில் ரெய்டு நடக்கவே இல்லை என்று தினகரன் மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் எனது வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. ஆனால் புதுவையில் ஆரோவில்லில் எனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ரெய்டு நடக்கிறது.
பண்ணை வீட்டை பராமரிக்கும் இரு பணியாளர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் இருவரும் படிப்பறிவில்லாதவர்கள். அதனால் அவர்களை அதிகாரிகள் ஏமாற்றக் கூடும் என்பதால் எனது வழக்கறிஞரையும், நண்பர்களையும், கட்சி பிரமுகர்களையும் அனுப்பியுள்ளேன்.
அங்கு ஏன் ரெய்டு என்று புரியவில்லை. அங்கு சாணியும், உரமும்தான் கிடைக்கும். படிப்பறிவில்லாத பணியாளர்களை ஏமாற்றி அதிகாரிகளாகவே எதையாவது வைத்து விட்டு எடுத்தால்தான் உண்டு என்று கலாய்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications