ஐடி ரெய்டு என கூறப்பட்ட நேரத்தில் அசால்ட்டாக கோ பூஜை செய்த டிடிவி தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐடி ரெய்டுக்கு நடுவே அசால்ட்டடாக கோ பூஜை செய்த டிடிவி தினகரன்!- வீடியோ

சென்னை: வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறப்பட்ட நேரத்தில் டிடிவி தினகரன் கோ பூஜை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா குடும்பத்தினர், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 190க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மெகா சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பாஜக அரசின் அடக்குமுறை என விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

வீட்டிற்குள் ரெய்டு

வீட்டிற்குள் ரெய்டு

சென்னை பெசன்ட்நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்காக டிடிவி தினகரன் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பதட்டமே இல்லாமல் கோ பூஜை

பதட்டமே இல்லாமல் கோ பூஜை

அப்போது டிடிவி தினகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்கு வெளியே கோ பூஜை நடத்தினார். டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதாவும் எந்த பதட்டமும் இல்லாமல் பசுவையும் கன்றையும் வைத்து கோ பூஜை நடத்தினர்.

வாழைப்பழம் கொடுத்த டிடிவி

வாழைப்பழம் கொடுத்த டிடிவி

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கும் கன்றுக்கும் அவர்கள் வாழை பழங்களை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களை சந்திப்பேன் என்று கூறிவிட்டு டிடிவி தினகன் உள்ளே சென்றார்

அனுராதா வாக்குவாதம்

அனுராதா வாக்குவாதம்

முன்னதாக கோ மாதா பூஜை செய்ய அங்கு குவிக்கப்பட்டிருக்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து தினகரனின் மனைவி அனுராதா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோ மாதா பூஜைக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran did ko madha pooja with his family in Besant nagar house. when its said IT officials raiding at his home.
Please Wait while comments are loading...