நொந்து போய் ஓடுவார் எடப்பாடி பழனிச்சாமி! ஆதரவாளர்களிடம் கலகலத்த தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மன்னார்குடி குடும்ப உறவுகளுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் தினகரன். எடப்பாடி பழனிசாமியை அரசை அசைத்துப் பார்க்கும் வேலைகளையும் தொடங்கிவிட்டார்.

அடுத்து நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன். சட்டரீதியாகவே நமது எதிர்ப்பைப் பதிவு செய்வோம். அவர்களாகவே ஆட்சியில் இருந்து இறங்கி ஓடுவார்கள்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் தினகரன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஆலோசித்தே, ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறார் தினகரன். கடந்தமுறை நடந்த சிறை சந்திப்பில், கட்சியைக் காப்பாற்ற சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி அரசின் திரைமறைவு வேலைகளைப் பற்றியும் விவரித்திருக்கிறார் தினகரன்.

கொதிப்பு

கொதிப்பு

' நாம் அழைத்தால் மறு பேச்சில்லாமல் பன்னீர்செல்வம் வந்துவிடுவார். எடப்பாடி பழனிசாமியை டெல்லி ஆட்டுவிக்கிறது. அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள பொம்மை போல செயல்படுகிறார்கள். நம்மை அழிக்கும் வேலையை நேரடியாகச் செய்கிறார்கள்' எனவும் கொதித்திருக்கிறார்.

எடப்பாடி கோபம்

எடப்பாடி கோபம்

இதன்பின்னர், கட்சி ஒற்றுமைக்காக சுற்றுப்பயணம் செல்வதாகவும் அறிவித்தார். புதிய நிர்வாகிகள் அறிவிப்பு, சுற்றுப்பயணம் போன்ற அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. ' தைரியம் இருந்தால் கட்சி அலுவலகத்துக்குள் கால் வைக்கட்டும்' என சசிகலா ஆதரவு அமைச்சர்களிடம் நேரடியாகவே கூறிவிட்டார் எடப்பாடி.

சுற்றுப் பயணம்

சுற்றுப் பயணம்

இதன்பின்னர், கட்சி அலுவலகத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார். ' இதையும் தாண்டி கட்சி அலுவலகம் வந்தால், சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி கைது செய்வார்கள்' என்பதால், சுற்றுப்பயணத்துக்கு நாள் குறித்தார் தினகரன். முன்பு இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திகார் சிறையில் இருந்தபோது, மாவட்டத் தலைநகரங்களில் கூட்டம் நடத்தினார் நாஞ்சில் சம்பத். இந்தக் கூட்டம் பற்றிய செய்தியை தொடக்கத்தில் ஜெயா டி.வி வெளியிடவில்லை. கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சசிகலா உறவுகள், லைவ் கவரேஜ் கொடுத்தனர்.

பிரமாண்ட கூட்டங்கள்

பிரமாண்ட கூட்டங்கள்

அதேபோன்ற ஒரு பிரமாண்ட கூட்டத்தை இனி வரும் காலங்களில் நடத்தவும் முடிவு செய்திருக்கிறார். இன்று எடப்பாடி பழனிசாமி அணியினர், தலைமைக் கழகத்தில் போட்ட தீர்மானத்தைப் பார்த்து தினகரன் அதிர்ச்சியடையவில்லை. தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசியவர், ' என் மீது நடவடிக்கை எடுக்க இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த அறிவிப்பைப் பார்த்து நீங்கள் அச்சப்பட வேண்டாம். நமது கட்சிப் பணியைத் தொடர்ந்து செய்வோம். சட்டரீதியாக நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். வழக்கம்போல, உங்கள் கட்சிப் பணிகளைத் தொடருங்கள். நாம் முன்னேறிவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான், இப்படியொரு தடுமாற்றமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். வரப் போகும் நாட்களில் நம்முடைய செயல்பாட்டைப் பார்த்து, அவர்கள் நொந்துதான் போவார்கள்' என சிரித்துக் கொண்டே பேசியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran is confident over Edappadi Palanisamy actions and he is getting ready to bounce back, says sources.
Please Wait while comments are loading...