For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர் வந்திருச்சாம் வாங்க! ரஜினிக்கு எதிராக டுவிட்டர் ரியாக்சன்கள்.. #ShameOnYouSanghiRajini

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராடுவதை வன்முறை என்று ரஜினி விமர்சித்த காரணத்தால் பலரும் அவருக்கு எதிராக டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்காமல், அதை எதிர்த்துப் போராடுவோருக்கு அறிவுரை கூறி கருத்து தெரிவித்த ரஜினி, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்றார்.

இவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியின் கருத்து பாஜகவின் கருத்தை பிரதிபலிப்பதாக கூறி பலரும் கருத்துக்களை பதிவிட்டு அவற்றை #ShameOnYouSanghiRajini என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்

குடியுரிமைச் சட்டம்.. உங்க கருத்து என்ன.. அதைச் சொல்லுங்க.. ரஜினிக்கு சீமான் சுளீர் கேள்வி குடியுரிமைச் சட்டம்.. உங்க கருத்து என்ன.. அதைச் சொல்லுங்க.. ரஜினிக்கு சீமான் சுளீர் கேள்வி

கமல் கருத்தை வைத்து

கமல் கருத்தை வைத்து

கமல் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு போர் வந்திருச்சு.. வாங்க என்று தெரிவித்துள்ளார்.

தர்பார் விழாவில்

தர்பார் திரைப்பட விழாவில் வாய் திறக்காத ரஜினி இப்போது பேசுவதாக ஒருவர் விமர்சித்துள்ளார்.

மக்களை ஆதரிக்க மாட்டார்

ரஜினியை எப்போதும் நம்பாதீர்கள்.அவர் அரசின் கருத்தையே பிரதிபலிப்பார். ஆர்எஸ்எஸ் கருத்தை அவர் ஆதரிப்பார் என்று பால முருகன் என்பவர் தெரிவித்துள்ளார்.

வேண்டாம் அரசியல்

ரஜினி சினிமாவில் ஹீரோ என்றும் அவருக்கு வேண்டாம் அரசியல் என்றும் ஒருவர் கூறியுள்ளார்.

ரஜினிக்கு எதிர்ப்பு

குடியுரிமை சட்டம் குறித்து கருத்து தெரிவித்த சித்தார்த்தை பாராட்டியும் ரஜினியை விமர்சித்தும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

English summary
twitter trending against rajini over his comments OF citizenship ammendment act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X