For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமநாதபுரம்: திருப்புல்லாணியில் கிணறு தோண்டும் போது விபத்து- மண் சரிந்து 2 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்ததில் 2 தொழிலாளர்கள் புதையுண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பேருமே சடலமாக மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது குத்துகல்வலசை கிராமம். இங்குள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த பணியில் மாரிவலசையை சேர்ந்த சின்னையா,30, பாலுச்சாமி 40, குப்புசாமி, முருகேசன் ஆகிய 4 பேர் ஈடுபட்டு வந்தனர். இன்று காலையும் 4 பேரும் கிணறு தோண்டும் பணியினை மேற்கொண்டனர்.

Two buried while digging well

இதில் சின்னையா, பாலுச்சாமி ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி பள்ளம் தோண்டி கொண்டி ருந்தனர். அப்போது திடீ ரென மண் சரிவு ஏற்பட் டது. இதில் 2 தொழிலா ளர்களும் சிக்கினர்.

சுமார் 10 அடி ஆழத்தில் மண் மூடியதால் தொழிலாளர்களால் வெளியே வரமுடியவில்லை. அவர்கள் மண்ணுக்குள் மூச்சு திணறினர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் தாசில்தார் மாரி, திருப்புல் லாணி போலீசார் மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செய லாளர் முனியாண்டி மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மணல் அள்ளும் எந்திரம் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்றது.

பல மணி நேர போராட் டத்திற்கு பின் சின்னையா, பாலுச்சாமி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டது. இறந்த பாலுச்சாமிக்கு முருகம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ள னர். சின்னையாவுக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார்.

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மண் சரிந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Two persons were buried whle digglng well near Ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X