திண்டுக்கல்லில் இரு பேருந்துகள் மோதல்- 6 பேர் பரிதாபமாக பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

ஒட்டன்சத்திரத்தில் பலக்கனூத்து பகுதியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு எதிரே தனியார் பேருந்தும் வந்தது.

Two buses clash in Dindigul- 6 were died

இந்நிலையில் பழங்காநத்தூர் என்ற இடத்தில் இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

மேலும் காயமடைந்த 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Private and Government buses clash eath other in Dindigul district. 6 were died in this accident.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற