For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூரில் முகமூடி அணிந்து கொள்ளை: தடுத்தவர்களை இரும்புக்கம்பியால் தாக்கிய கொடூரம்

திருப்பூரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் பிடிக்க முயன்றவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி... தடுத்தவர் மீது தாக்குதல்

    திருப்பூர்: அடுத்தடுத்து மூன்று வீடுகளில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் பிடிக்க முயன்றவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    திருப்பூர் மங்கலம் சாலை, ஆண்டிபாளையம் அருகே ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பனியன் கம்பனி அதிபர் பாலகிருஷ்னன், இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகன் கோகுலுடன் வீட்டின் உள் அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 2-மணி அளவில் யாரோ வீட்டு பூட்டை உடைப்பது போல் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் வெளியே வந்துள்ளார். அப்போது இரண்டு முகமூடி கொள்ளையர்கள் திடீரென வீட்டினுள் நுழைந்து பாலகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

    முகமூடி கொள்ளையர்கள் தாக்குதல்

    முகமூடி கொள்ளையர்கள் தாக்குதல்

    இதனால் அலறிய அவர் ரத்த வெள்ளத்தால் நிலை தடுமாறி கீழே விழந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு விழித்து கொண்ட அவரது 9-ம் வகுப்பு படிக்கும் அவரது மகனும் அவரது மனைவியும் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.அவர்களையும் கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர்.

    தப்பியோடிய கொள்ளையர்கள்

    தப்பியோடிய கொள்ளையர்கள்

    இதில் முகமூடி கொள்ளையர்களை தடுக்க முயன்ற பள்ளி மாணவன் தலையில் கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் மாணவன் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணனின் மனைவி அணிந்திருந்த 2 1/2 பவுன் தங்க நகையை கொள்ளையர்கள் பறித்தனர். இதனிடையே ரத்தம் வழிய, வழிய, மாணவன், அவனது தந்தையும் திருடன், திருடன் என வீட்டின் ஜன்னல் கதவை திறந்து கொண்டு கத்தியவுடன் கொள்ளையர்கள் முன்வாசல் வழியே எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

    பீதியில் உறைந்துள்ள மக்கள்

    பீதியில் உறைந்துள்ள மக்கள்

    தொடர்ந்து முகமூடி கொள்ளையர்கள் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசையை காட்ட அருகில் இருந்த செந்தில் நகர் குடியிறுப்பு பகுதிகளில் உள்ள 3 - வீடுகளில் நுழைந்தனர். ஆனால் அங்கு வீட்டு கதவை திறக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர். இந்த முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் ஜான் ஜோதி கார்டன், செந்தில் நகர் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டிலும் கைவரிசை

    ஈரோட்டிலும் கைவரிசை

    இதேபோல் ஈரோட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஈரோடு அருகே செங்கோடம்பாளையம் திரிவேணி நகரில் வசித்து வருபவர் ராஜேஷ் - பெர்லின் தம்பதியினர் ராஜேஷ் பிரபல வேட்டி தயாரிக்கும் (MCR வேட்டிகள்)நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பெர்லின் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    தாய் வீட்டிற்கு சென்ற மனைவி

    தாய் வீட்டிற்கு சென்ற மனைவி

    ராஜேஷ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அலுவலக வேலையாக கேரளா சென்று இருந்தார். அதனால் இரவில் தனியாக இருக்க கூடாது என நினைத்த ஆசிரியை பெர்லின் திண்டலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இதனை அறிந்த மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 24 சவரன் நகை ஏழாயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர் இன்று காலை வீடு திரும்பிய ராஜேஷ் அதிர்ச்சி அடைந்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தடயங்களை சேகரித்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    English summary
    Two mask robbers tried to theft in Thirupur. They have attacked three persons for trying to catch them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X