For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன கிடைத்துள்ளது?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன கிடைத்துள்ளது என்று பார்ப்போம்.

20142015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் தமிழகத்திற்கு என்னென்ன கிடைத்துள்ளது என்று பார்ப்போம்.

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி

தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையே அமைக்கப்படும் இன்டஸ்ட்ரியல் காரிடார் என்னும் நெடுஞ்சாலையில் சிறப்பு தொழில் நகரங்கள் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள தமிழகத்தின் பொன்னேரி உள்பட 3 இடங்களில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படுகிறது.

காசநோய்

காசநோய்

காசநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க 2 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங் துவங்கப்படுகிறது. இதில் ஒன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மற்றொன்று சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலும் அமைக்கப்படுகிறது.

ஜவுளி

ஜவுளி

ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த 6 ஜவுளி குழுமங்கள் அமைக்கப்படுகிறது. அவை பரேலி, லக்னோ, சூரத், கட்ச், பகல்பூர், மைசூர் மற்றும் தமிழகத்தில் அமைக்கப்படுகின்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெளிவிட்ட துறைமுக திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக ரூ.11 ஆயிரத்து 635 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

தேசிய புராதான நகர மேம்பாடு மற்றும் அதிகரித்தல் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பழமையான நகரங்கள் பாதுகாக்கப்படும். இத்திட்டம் முதல்கட்டமாக ரூ.200 கோடி செலவில் மதுரா, அமிர்தசரஸ், கயா, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சூரிய மின்ஒளி

சூரிய மின்ஒளி

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிக்க அல்ட்ரா மெகா சோலார் பவர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் தமிழகம், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுவை

புதுவை

வெள்ளம், புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க புதுச்சேரிக்கு ரூ.188 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

English summary
TN gets its own share from the union budget 2014 presented by finance minister Arun Jaitley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X