For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோட்டில் 85 வயது மூதாட்டியின் வீட்டை அபகரிக்க மர்ம நபர்கள் முயற்சி- தடுப்பாரா கலெக்டர்?!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய வீட்டை சிலர் அபகரிக்க முயல்வதாக மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு மனு ஒன்றினை அளித்துள்ளார்.

ஈரோட்டில் சம்பத் நகர், வாட்டர் டேங்க் அருகில் 85 வயதான மூதாட்டி சிவபாக்கியம் வசித்து வருகின்றார்.

இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகத்தை சந்தித்து நேற்று ஒரு மனு கொடுத்தார்.

13 ஆண்டுகளாக சொந்தம்:

அதில், "நான் 13 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய என் சொந்த வீட்டில் குடியிருந்து வருகிறேன். எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியூர் சென்ற மகன் மீண்டும் திரும்பி வரவில்லை.

தனியாக வாசம்:

மகள் வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு கணவருடன் வசித்து வருகிறாள். இதனால் நான் எனது வீட்டில் தனியாக வசித்து வருகிறேன்.

அபகரிக்க முயற்சி:

இந்த நிலையில் என் வீட்டை சிலர் அபகாக்க முயற்சி செய்து வருகின்றனர். அதில் ஒருவன் சமீபத்தில் என் ஏ.டி.எம் கார்டினை பறித்து விட்டான்.

உடமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு:

இதனால் முதியோர் உதவித் தொகையும் சில மாதங்களாக எனக்கு கிடைக்கவில்லை. எனவே என் உடமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பரபரப்பு புகார்:

மூதாட்டி சிவபாக்கியம் தள்ளாத வயதிலும் ஊன்று கோலுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Some unknown members are trying to expropriation an old lady's house in Erode. She gave a petition to Erode district collector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X