For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளம் பாதித்த சென்னை மக்களே... கொசுக்களை வி்ரட்டியடிக்க கை கொடுக்கிறது அர்பன்கிளாப்

Google Oneindia Tamil News

சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது சென்னை. பல பகுதிகளில் இன்னும் கூட மழை வெள்ளம் போகவில்லை. வேளச்சேரி தொடர்ந்து வெனிஸ் நகரமாக திகழ்கிறது. கூடவே சாக்கடை நீரும் கலந்து சென்னை மக்களை நரக வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த அர்பன் கிளாப் என்ற நிறுவனம் சென்னை மக்களுக்கு பெரிய ஒத்தாசை செய்ய வந்துள்ளது.

வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பல்கிப் பெருகி மக்களை கடித்துக் குதறி வருகின்றன. பூரான், பாம்புகள் புகாத குடிசைப் பகுதிகளே இல்லை. இதனால் மக்கள் தொடர்ந்து தவிப்பில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் அர்பன்கிளாப் என்ற பூச்சி மருந்து நிறுவனம், சென்னை மக்களுக்கு இலவசமாக கொசு ஒழிப்பு முகாம்களை நடத்த முன்வந்துள்ளது.

திருவான்மியூர் குப்பம்

திருவான்மியூர் குப்பம்

திருவான்மியூர் குப்பம் உள்ளிட்ட 3 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. ஒவ்வொரு முகாமிலும் 15 வாலண்டியர்கள் கலந்து கொள்கின்றனர்.

சென்னைக்கு உதவும் எண்ணம்

சென்னைக்கு உதவும் எண்ணம்

இதுகுறித்து அர்பன்கிளாப் நிறுவன இணை நிறுவனர் அபிராஜ் பாஹல் கூறுகையில், கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் பல்வேறு தொல்லைகளில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு நிறுவனமாக அவர்களுக்கு உதவ விரும்பினோம். அதற்காகவே இந்த முகாம் என்றார்.

கொசுக்கள் பெருக்கம்

கொசுக்கள் பெருக்கம்

மழை விட்டும் வெள்ளம் வடியாமல் இருப்பதால் கொசுக்கள் பெருகியுள்ளன. இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா உள்ளிட்டவை பரவும் அபாயம் உள்ளது.

கொசு ஒழிப்பு

கொசு ஒழிப்பு

கொசுக்களை மட்டுமல்லாமல் பிற வகை பூச்சிகளையும் ஒழிக்க அர்பன் கிளாப் உதவுகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளை அது தீவிரமாக எடுத்து வருகிறது.

குயில் குப்பம்- கானகம்

குயில் குப்பம்- கானகம்

திருவான்மியூர் தவிர வேளச்சேரியில் குயில் குப்பம், தரமணியில் கானகம் ஆகிய இடங்களிலும் இந்த இலவச பூச்சி ஒழிப்பு முகாமுக்கு அர்பன்கிளாப் ஏற்பாடு செய்துள்ளது.

English summary
Following the severe rainfall that flooded Chennai recently, UrbanClap has come up with an initiative to organize a pest control camp at three locations within the city. The activity is scheduled to start at Thiruvanmiyur Kuppam, and will be led by fifteen volunteers from the organization, and its partners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X