சேற்றிடமிருந்து சந்தனத்தையா எதிர்பார்க்க முடியும்.. ராஜேந்திர பாலாஜிக்கு வைகைசெல்வன் பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா போஸ்டர் ஒட்டிய ராஜேந்திர பாலாஜியை அமைச்சராக்கியது திராவிட இயக்கத்தின் மாயாஜாலம் என்று வைகைசெல்வன் தெரிவித்தார்.

தனியார் பாலில் கலப்படம் இல்லாததால் பொய் புகார் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதேபோல் அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் வைகைசெல்வனும் அவர் ராஜினாமா செய்ய வேண்டு்ம என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து சிவகாசியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை வைகை செல்வன் பேசுகிறார். ரூ. 500 கூலிக்காக பேசும் கூலி பேச்சாளர்தான் இந்த வைகைசெல்வன் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

வைகைசெல்வன் பதிலடி

வைகைசெல்வன் பதிலடி

இந்நிலையில் தன்னை கடுமையாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜிக்கு, வைகைசெல்வன் பதிலடி கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், என்னை கூலிக்கு பேசுகிற பேச்சாளர் என்று குறிப்பிடுவதன் மூலம் திராவிட இயக்கத்தையே கொச்சைப்படுத்திவிட்டார்.

சினிமா போஸ்டர்

சினிமா போஸ்டர்

திராவிட இயக்கம் என்பது எழுத்தாலும், பேச்சாலும் வளர்ந்த இயக்கம் என்பது வரலாறு. அந்த வரலாறுகூட தெரியாமல் ஒருவர் அமைச்சராக இருப்பதுதான் காலத்தின் கோலம். தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் தெருத் தெருவாக சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார் ராஜேந்திர பாலாஜி.

மாயாஜாலம்

மாயாஜாலம்

பசை வாளி தூக்கியவரை சினிமா துறைக்கே அமைச்சராக்கியது திராவிட இயக்கத்தின் மாயாஜாலம். அண்ணாவின் பேச்சு, எம்ஜிஆரின் வசீகரம், ஜெயலலிதாவின் ஓயாத உழைப்பு ஆகியவற்றால்தான் இவர் இவ்வாறு உயர்ந்துள்ளார் என்பதை மறந்து விட வேண்டாம்.

பண்புள்ளவராகுங்கள்

பண்புள்ளவராகுங்கள்

கொஞ்சமாவது பண்புள்ளவராக மாற முயற்சி செய்ய வேண்டும். உணர்ச்சி வேகத்தில் சேற்றை சந்தனம் என்று வாரி பூச நினைக்கும் அவர் தன் மீதே பூசிக் கொள்கிறார். மேலும் சேற்றிடம் சந்தனத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் கிடைக்கும்.

வசவாளர்கள் வாழ்க

வசவாளர்கள் வாழ்க

‘வசவாளர்கள் வாழ்க' என்பதுதான் திராவிட இயக்கத்தின் பெருந்தன்மை. அந்தப் பெருந்தன்மையோடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மன்னிக்க எனக்கு திராவிட இயக்கம் கற்றுத் தந்திருக்கிறது. ஆகவே அவரை நான் மன்னிக்கிறேன் என்று தன் அறிக்கையில் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vaiko selvam says that we cannot expect sandal from mud.
Please Wait while comments are loading...