For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா உறவினர் வீடு ரெய்டுகளுக்கு நான் பொறுப்பு அல்ல: வைத்திலிங்கம் எம்.பி.

சசிகலா உறவினர் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளுக்கு தாம் பொறுப்பு அல்ல என்கிறார் வைத்திலிங்கம்.

By Mathi
Google Oneindia Tamil News

கும்பகோணம்: சசிகலா உறவினர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளுக்கு தாம் காரணம் என வெளியாகும் செய்திகளை அதிமுக ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம் மறுத்துள்ளார்.

சசிகலா குடும்பத்தின் 355 பேரை இலக்கு வைத்து வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 190 இடங்களில் 2,000 அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

Vaithilingam comments on IT Raids

வருமான வரித்துறைக்கு சசிகலா உறவினர்களின் முழு விவரங்களும் யாரோ சிலரால் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. சில ஊடகங்கள் அதிமுக ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம்தான் அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறையிடம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தன.

இது தொடர்பாக கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கத்திடம் கேட்டபோது, சசிகலா உறவினர் வீடுகளில் நடைபெற்ற ரெய்டுகளுக்கு நான் பொறுப்பு அல்ல. வருமான வரி கட்டாதவர்கள் மீது வழக்கமாக நடத்தப்படும் சோதனைதான் இது என்று விளக்கம் அளித்தார்.

English summary
AIADMK Rajyasabha MP Vaithilingam said that the IT raid on Sasikala family was routine action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X