For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம்: வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் ஏரி உடைந்தது - குடியிருப்புகளில் வெள்ளம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் நல்லம்பாக்கம் ஏரி கரை உடைந்து குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. ஏரிக்கரை உடைந்ததால் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளில் இருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வார காலமாக பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதைத் தொடர்ந்து ஏரி, குளங்களின் உறுதியின்மை காரணமாக சில ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து வருகின்றது.

Vandalore lake breaks houses sumerged

வண்டலூர் அருகேயுள்ள நல்லம்பாக்கம் ஏரி 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரியாகும். கடந்த ஆகஸ்டு மாதம் நல்லம்பாக்கம் ஏரியில் ராட்சத பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் அள்ளப்பட்டது. இதனால், அருகிலுள்ள கிராம மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மண் அள்ளிய வாகனங்களைணம் சிறைபிடித்தனர். மேலும், ஏரியில் நீர் நிறையும்போது கரைகள் பலவீனமடைந்து உடைந்தவிடவும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறி போராடினர். இந்த நிலையில் வடகிழக்கு பருமழையின் தீவிரத்தால் ஏரி நிரம்பியுள்ளது. கரைகள் பலவீனமாக இருந்த காரணத்தால் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளில் இருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
Hundreds of houses are sumerged due to the break in a lake at Nallampakkam near Vandalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X