நாகையில் மழை எதிரொலியாக நீதிமன்றத்தின் சுவர் இடிந்து விழுந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம் : நாகை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ப்பலி எதுவும் இல்லை.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழி, நாகப்பட்டினம்,வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

 Wall collapsed at Nagapattinam district court due to continuous rain

இந்நிலையில் இன்று காலையில் மழையின் எதிரொலியாக நாகை மாவட்ட 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ப்பலியோ ஏற்படவில்லை.

ஏற்கனவே கோவை மாவட்டம் சோமனூரில் மழை காரணமாக பேருந்துநிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போதே தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த பழைய கட்டிடங்களை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை மாவட்ட நீதிமன்றத்தின் சுவர் இடிந்து விழுந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Due to heavy rain Nagapattinam district court's wall collapsed and fortunately no death or injuries reported.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற