திருச்சி உஷா கர்ப்பிணியா?: என்ன சொல்கிறது பிரேத பரிசோதனை ரிப்போர்ட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளரால் உதைக்கப்பட்ட பெண் கர்ப்பிணி இல்லை- வீடியோ

  திருச்சி: திருச்சியில் காவல் துறை ஆய்வாளரால் எட்டி உதைத்து கொல்லப்பட்ட உஷா கர்ப்பிணி இல்லை என்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

  திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் கடந்த 7-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

  போலீஸார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

  சாலை மறியல்

  சாலை மறியல்

  பின்னால் வந்த வேன் ஏறியதில்உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார். உஷா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று ராஜா தெரிவித்தார். கர்ப்பிணியை எட்டி உதைத்த செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

  கொலை வழக்கு

  கொலை வழக்கு

  இந்நிலையில் காமராஜ் 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை உஷாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

  காமராஜ் சஸ்பெண்ட்

  காமராஜ் சஸ்பெண்ட்

  இதனிடையே அந்த பெண் உயிரிழக்க காரணமான காமராஜை திருச்சி மத்திய மண்டல் ஐ.ஜி. வரதராஜு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் போலீஸார் சமாதான பேச்சு வார்த்தைக்கு பிறகு சடலத்தை உறவினர்கள் வாங்கி அவருக்கு நல்லடக்கம் செய்தனர்.

  மாவட்ட எஸ்பிக்கு அறிக்கை

  மாவட்ட எஸ்பிக்கு அறிக்கை

  இந்நிலையில் உஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த திருச்சி மருத்துவக் கல்லூரி டீன் அனிதா அதன் அறிக்கையை திருச்சி மாவட்ட எஸ்பி கல்யாணுக்கு அனுப்பி வைத்தார்.

  உஷா கர்ப்பிணி அல்ல

  உஷா கர்ப்பிணி அல்ல

  இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி உஷா கர்ப்பிணி இல்லை என்று கூறினார். இதுகுறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Trichy Usha who dies when a SI kicks of the two wheeler she travels. Sources says that She was pregnant for 3 months. But her postmordem report says that she was not pregnant.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற