For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் கட்டண உயர்வால் டாஸ்மாக் கஸ்டமர்கள் அடையும் பாதிப்பை கேட்க ஆளில்லையா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மதுகுடிப்போரையும் மின்கட்டண உயர்வு விட்டுவைக்கவில்லை என்பதற்கு பார் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள இந்த துண்டு பிரசுரமே சாட்சி.

தமிழகத்தில் கடந்த 12ம் தேதி யில் இருந்து 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Water pocket rate increases in a Tasmac

தமிழகத்தில் ஒரு கோடியே 71 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதுதவிர குடிசை இணைப்புகள் 11.83 லட்சம், தெருவிளக்கு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் 5.82 லட்சம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் 71 ஆயிரம், தனியார் கல்வி நிறுவனங்கள் 17 ஆயிரம், விசைத்தறி நெசவாளர்கள் 1.3 லட்சம், குடிசை மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் 1.02 லட்சம், விவசாய மின் இணைப்பு 20.47 லட்சம், கோயில்கள் 89 ஆயிரம் என மொத்தம் 2.45 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மேலும், 8 ஆயிரம் உயர் மின்னழுத்த நிறுவன நுகர்வோரும் உள்ளனர்.

இதில், 11.83 லட்சம் குடிசை மின் இணைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. கைத்தறி நெசவாளர் களுக்கு 100 யூனிட் வரை கட்டணம் இல்லை. அதற்குமேல், வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 மாதத்துக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோருக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேல் பயன்படுத்தினால் வீட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால் மது பார்கள் நிலைமையை கேட்கவா வேண்டும். அங்கு ஏற்கனவே சரக்கு விலையை கூட்டிவிட்டார்கள். இப்போது கட்டண உயர்வு வேறு. அதிர்ச்சியுள்ள மதுபான பார் ஒன்றில் சரக்குக்கு மிக்சிங் செய்ய தேவைப்படும் வாட்டர் விலையை கூட்டிவிட்டதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதை இந்த படத்தில் பார்க்கலாம்

English summary
Water pocket rate has been increased in a Tasmac bar in Tamilnadu as power tariff hiked by the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X