கைரேகை வாங்கியபோது ஜெ. சுயநினைவோடுதான் இருந்தார்.. டாக்டர் பாலாஜி வாக்குமூலம்
3 தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆணையத்திடம் மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை: 3 தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆணையத்திடம் மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் வாக்குமூலம் அளித்த விவரங்கள் தன்னிடம் இருக்கிறது என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணையை தற்போது நடைபெற்று வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தமிழ்நாட்டில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து தற்போது விசாரிக்கப்பட்டது.
அதில் 3 தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆணையத்திடம் மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் ஜெ.க்கு அளித்த சிகிச்சை பற்றி ஓபிஎஸ்ஸுக்கு 10க்கும் மேற்பட்ட முறை தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சிகிச்சை பற்றி கூறப்பட்டது என்றும் மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார் என வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications