தமிழகத்தில் ஜில்லுன்னு மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. இப்ப மதுரையில் பெய்யுது பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆந்திராவின் கடலோரப் பகுதியில் வலிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.

Weather department predicts that TN may get Rainfall for next 24 hours

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக அதிராட்பட்டினம், சின்னக்கல்லூரில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் 56 மி.மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. இது இயல்பாக பெய்யும் மழை அளவைவிட 6 மி.மீ குறைவாகும்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடற்கரைப் பகுதியின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழ்ற்சி ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையை பொருத்தவரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகம் மற்றும புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மழை

இதற்கிடையே மதுரையில் பிற்பகலில் பரவலாக நல்ல மழை பெய்து மதுரை மக்களை குளிர்வித்தது. மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai Metrology department director Balachandran predicts that Tamilnadu and Puducherry may get moderate rainfall for next 24 hours
Please Wait while comments are loading...