"நொறுங்கிய இதயம்".. காதலி முகத்தை கூட பார்த்தது இல்லையாம்.. இளைஞர் எடுத்த பகீர் முடிவு.. இதுவா காதல்
காதலி இறந்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்டார்
கள்ளக்குறிச்சி: காதலி இறந்த துக்கம் தாளாமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இதயத்தை உலுக்கி எடுத்து வருகிறது.. இத்தனைக்கும் காதலியின் முகத்தை அவர் நேரில் ஒருமுறைகூட பார்த்தது இல்லையாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. 26 வயதாகிறது.. 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.. இவர் போட்டோகிராபர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டுடியோ ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வந்தார். இவருக்கு பூமிகா என்கிற பெண் ஃபேஸ்புக்கில் அறிமுகமானார்... ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த நிலையில், மெல்ல மெல்ல அந்த பழக்கம் காதலாக மாறியது.

முகம் பார்த்ததில்லை
இதுவரையில் இருவரும் நேரில் ஒருமுறை கூட சந்தித்தது இல்லை என்றாலும் மணிகண்டன் பூமிகாவை ஆழமாக காதலித்து வந்துள்ளார்.. என்னதான் ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருந்தாலும், பூமிகாவை நேரில் சந்தித்து காதலை எப்படியாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என்று காத்து கொண்டிருந்தார் மணிகண்டன்.. ஆனால், என்ன காரணமோ என்ன தெரியவில்லை, கடந்த சில நாட்களாகவே பூமிகாவிடம் அவரால் பேச முடியவில்லை.. ஃபேஸ்புக்கிற்கும் பூமிகா வராமலேயே இருந்துள்ளார்..

பூமிகா
இதனால் பூமிகாவுக்கு என்ன ஆச்சோ என்று தவித்தபடியே காணப்பட்டார். எத்தனையோ முறை பூமிகாவின் செல்போனுக்கு போன் செய்தும், அதை யாருமே எடுக்கவில்லை.. எனினும் விடாமல் போன் செய்து கொண்டேயிருந்தார்.. இந்நிலையில், திடீரென ஒருநாள் பூமிகாவின் செல்போனை அவரது பாட்டி எடுத்து பேசினார். அவரிடம் பூமிகா குறித்து மணிகண்டன் கேட்டார்.. இதய நோயால் பூமிகா சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாக பாட்டி தெரிவித்துள்ளார்...

மணிகண்டன்
இதை கேட்டவுடன் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான மணிகண்டன் அதிர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.. அவரால் அந்த ஷாக்கில் இருந்து மீளவே முடியவில்லை.. காதலியை மறக்கவும் முடியவில்லை.. அதனால், காதலி சென்ற இடத்துக்கே நாமும் சென்று விடலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.. விஷத்தை எடுத்து குடித்தார்... மயங்கி விழுந்து கிடந்த அவரை பார்த்ததும் குடும்பத்தினர் கதறி அழுது, அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சீரியஸ் கண்டிஷன்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது.. அப்போதுதான் எதற்காக விஷத்தை குடித்தாய் என்று குடும்பத்தினர் கேட்கவும், பூமிகாவின் மீதான தன்னுடைய காதலை சொன்னார்.. தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டும், அவரது நிலைமை மோசமானது.. இதனால், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், மணிகண்டனை காப்பாற்ற முடியவில்லை..

ஆழமான காதல்
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.. இதுகுறித்து அவரது அப்பா சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம்கூட மணிகண்டனுக்கு தெரியாதாம்.. முகத்தையும் நேரில் பார்த்தது இல்லையாம்.. இதயப்பூர்வமாக நேசித்த ஒரு பெண்ணுக்காக, தன் உயிரையும் இழக்க துணிந்த மணிகண்டனின் காதல், தமிழக மக்களையே விக்கித்து போக வைத்துள்ளது..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications