For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு கெட்ட செய்தி... பாஜக கூட்டணி பக்கம் பாயும் வன்னியர் ஓட்டுக்கள்!

|

டெல்லி: அதிமுக இது நிச்சயம் நல்ல செய்தியாக இருக்க முடியாது. காரணம், வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாய ஓட்டுக்கள் பாமக இடம் பெற்றுள்ள பாஜக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனவாம். அதேசமயம், தலித் வாக்குகள் திமுக, அதிமுக இடையே பிரிகிறதாம்.

சி.என்.என்.-ஐ.பி.என்.- லோக்நிதி- தி வீக் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இப்படிக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடர்பான கருத்துக் கணிப்பில் பிராந்தியவாரியாக ஓட்டுக்கள் எப்படிப் பிரிகின்றன என்பதை இதில் பார்க்கலாம்....

அதிமுக - திமுக - பாஜக

அதிமுக - திமுக - பாஜக

வட மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிமுக, திமுக, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறதாம்.

பாமகவால்

பாமகவால்

பாஜக என்பது பாமக என்று எடுத்துக் கொள்ளலாம். காரணம், பாமகதான இங்கு பலம வாயந்த கட்சி மேலும் வன்னியர்களின் கட்சியாகவும் இது இருப்பதால் பாஜக கூட்டணிக்கு பாமகவால் பலம் கிடைக்கிறது. இது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பாதகத்தை ஏற்படுத்தலாம்.

பாஜக கூட்டணிக்கு வன்னியர் ஆதரவு

பாஜக கூட்டணிக்கு வன்னியர் ஆதரவு

பா்மக இடம் பெற்றுள்ள பாஜக கூட்டணிக்கு இந்த முறை வன்னியர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் சூழல் நிலவுகிறதாம்.

36 சதவீத வாக்குகள் பாஜகவுக்கே

36 சதவீத வாக்குகள் பாஜகவுக்கே

வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்ளின் 36 சதவீத வாக்குகள் பாஜக கூட்டணிக்குக் கிடைக்குமாம்.

அதிமுகவுக்கு 28 சதவீதமே

அதிமுகவுக்கு 28 சதவீதமே

அதிமுகவுக்கு 28 சதவீத வன்னியர் வாக்குகளே கிடைக்கும் என்பதால் அதிமுகவினருக்கு இது நிச்சயம் கெட்ட செய்திதான்.

தர்மபுரி கலவரம் எதிரொலி

தர்மபுரி கலவரம் எதிரொலி

தர்மபுரியில் நடந்த சாதிக் கலவரம், இளவரசன் மரணம் உள்ளிட்டவை காரணமாக வன்னியர்கள் இந்த முறை அதிமுக்கு எதிராக கிளம்பியுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

திமுகவுக்கு 16 சதவீத ஆதரவு

திமுகவுக்கு 16 சதவீத ஆதரவு

திமுகவுக்கு 16 சதவீத வன்னியர்களின் ஆதரவே கிடைக்கும் என்றும் தெரிகிறது.

தலித்கள் அதிமுக பக்கம்

தலித்கள் அதிமுக பக்கம்

அதேசமயம் தலித்களின் வாக்குகள் பாஜக கூட்டணிக்கு அதிகம் கிடைக்காது. பெரும்பாலான தலித்கள் அதிமுகவுககு ஆதரவாக உள்ளனர். அதாவது 33 சதவீத தலித்கள் அதிமுகவை ஆதரிக்கின்றனராம்.

திமுகவுக்கு 30 சதவீதம் பேர்

திமுகவுக்கு 30 சதவீதம் பேர்

அதேசமயம், திமுகவுக்கு 30 சதவீத தலித்கள் ஆதரவாக உள்ளனர். இதனால் அதிமுக, திமுக இடையே இங்கு வா்க்குகள் பிரிகின்றன.

பாஜக கூட்டணிக்கு 13 சதவீதம்தான்

பாஜக கூட்டணிக்கு 13 சதவீதம்தான்

பாஜக கூட்டணிக்கு 13 சதவீத தலித் வாக்குகள்தான் கிடைக்கப் போகின்றன. இவை கூட கூட்டணியில் தேமுதிக இருப்பதால் கிடைக்கலாம் என்று தெரிகிறது.

English summary
The Vanniyars seem to be mostly with the BJP+ whereas the Dalits are split between ADMK and DMK alliance. 36 per cent Vanniyars are with the BJP alliance and 33 per cent Dalits are backing the AIADMK. 30 per cent of Dalits are with the DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X