For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

ஊட்டி: நேற்று முதல்நாள் ஊட்டியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய முதல்வர் ஸ்டாலின் 3 முக்கியமான விஷயங்களை அப்போது ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறாராம்.

முதல்வர் ஸ்டாலின் ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக நீலகிரி சென்று இருந்தார். அங்கு ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தவர் இடை இடையே அலுவல் பணிகளையும் மேற்கொண்டார்.

இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் இரவு முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்பி ஆ ராசா உள்ளிட்ட சில அமைச்சர்கள் இந்த மீட்டிங்கில் இருந்தனர்.

திடீரென சரிந்த கலெக்டர்.. பதறிப்போய் ஓடி வந்து தாங்கிப் பிடித்த ஸ்டாலின்.. தீயாகப் பரவும் வீடியோ! திடீரென சரிந்த கலெக்டர்.. பதறிப்போய் ஓடி வந்து தாங்கிப் பிடித்த ஸ்டாலின்.. தீயாகப் பரவும் வீடியோ!

என்ன மீட்டிங்

என்ன மீட்டிங்

அதேபோல் கான்பிரன்ஸ் வழியாக வீடியோ மூலம் அடுத்தடுத்து பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 3 விதமான விஷயங்களை இந்த மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. முதல் விஷயம் குறித்து முன்பே தகவல் வந்தது. அதன்படி பேரறிவாளன் போலவே மற்ற 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தார். உயர் அதிகாரிகள், டாப் லெவல் சட்ட வல்லுனர்கள், சீனியர் வழக்கறிஞர்கள் இந்த சந்திப்பில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.

6 பேர் விடுதலை

6 பேர் விடுதலை

இதில் முதல்வர் ஸ்டாலினிடம்.. 6 பேரையும் விடுதலை செய்வதில் சிக்கல் இல்லை. அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம். 161 படி அனுப்பினால் ஆளுநர் அதை ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதில் இருக்கும் சட்ட சிக்கல், காங்கிரஸ் எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தாராம். அடுத்தபடியாக முதல்வர் ஸ்டாலின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் பற்றியும் பேசி இருக்கிறாராம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ்

ஐஏஎஸ், ஐபிஎஸ்

தமிழ்நாட்டில் விரைவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15-20 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை ரீதியாக மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து துறை ரீதியாக இந்த மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் அதற்கான ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் செய்தாராம்.

கேபினெட்

கேபினெட்

அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டாலும் எல்லா துறைக்கும் அமைச்சர்கள் மாற்றம் நடக்க வாய்ப்பு இல்லை. இலாக்கா மாற்றம் இல்லாத அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர்களிடம் ஆலோசனை செய்து அவர்களுக்கான துறை ரீதியான செயலாளர்கள்.. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்ய முதல்வர் முடிவு செய்து இருக்கிறாராம். இது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் அந்த ஆலோசனையில் வேறு சில அதிகாரிகளிடம் பேசி இருக்கிறாராம்.

என்ன பேசினார்?

என்ன பேசினார்?


அதாவது தலைமை செயலக அதிகாரிகளிடம் எந்தெந்த துறையில் எந்த அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மோதல் உள்ளது. யாருக்கு இடையில் sync இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டு இருக்கிறாராம். அந்த லிஸ்ட் எடுக்கப்பட்டு அமைச்சரவை மாற்றம் வந்ததும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றமும் நடக்கும் என்று கூறுகிறார்கள். இதன் பின்புதான் அங்கு மேசையில் இருந்த முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் அதே மீட்டிங்கில் ஆலோசனை செய்து இருக்கிறாராம்.

அமைச்சரவை

அமைச்சரவை

அமைச்சரவை இலாக்கா மற்றும் அமைச்சர்கள் மாற்றம் பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆராய்வதற்காக நிர்வாக ரீதியாக ஒரு ரிப்போர்ட் கேட்டு இருந்தார். அந்த ரிப்போர்ட் தயார் செய்யப்பட்டு அமைச்சர்களின் மார்க்குகள் போடப்பட்டு வழங்கப்பட்டு இருக்கிறதாம். இதில் 3 அமைச்சர்களின் மார்க்குகள் மட்டும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு அமைச்சர் சமீபத்தில்தான் ஜாதி சர்ச்சையில் சிக்கினார். அவர் தொடங்கி இன்னும் 2 அமைச்சர்களை சேர்த்து அவர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக ரிப்போர்ட்டை முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இப்படி மூன்று விஷயங்களை பற்றி பேசியதால் இந்த மீட்டிங் நீண்ட நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

English summary
What did CM Stalin discuss in his top-level ooty meeting?: Cabinet suffle on the card. நேற்று முதல்நாள் ஊட்டியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய முதல்வர் ஸ்டாலின் 3 முக்கியமான விஷயங்களை அப்போது ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X