தீக்கு இரையான ரேஸ் வீரர் அஸ்வின்.. விபத்துக்குக் காரணம் என்ன?... திக் திக் தகவல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சொகுசு கார் தீப்பற்றியதன் பின்னணியில் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே வேகமாக வந்த சொகுசு கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவி நிவேதாவும் மரணமடைந்தனர்.

2 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற அஸ்வின் சுந்தருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி திருமணம் ஆனது. தொழில் முறை கார் பந்தய வீரரான அஸ்வின் நேற்றிரவு இரவு உணவுக்காக சொகுசு காரான பிஎம்டபியூ காரில் தன் மனைவியுடன் சென்றார்.

3 மணி நேரமாக தீ...

3 மணி நேரமாக தீ...

அப்போது எம்.ஆர்.சி.நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. 3 மணி நேரமாக கார் முழுவதும் எரிந்ததில் அஸ்வினும் அவரது மனைவியும் இறந்தனர்.

கார் ரேசர்

கார் ரேசர்

இந்த சம்பவம் அனைவரையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பின்னணியில் என்ன உள்ளது. கார் ரேசரான அஸ்வினுக்கு தறிகெட்டு ஓடும் காரை கட்டுப்படுத்த தெரியாதா என்ன?

மருத்துவ மாணவி

மருத்துவ மாணவி

மேலும் அவரது மனைவி கடந்த ஆண்டுதான் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். இந்நிலையில் மருத்துவம் பயின்ற அவருக்கு தன்னையும், தன் கணவரையும் காப்பாற்றிக் கொள்ள தெரியாதா? இல்லை முயன்றிருக்க மாட்டாரா?

டிரைவர்கள் உயிர் தப்பும் சம்பவம்

டிரைவர்கள் உயிர் தப்பும் சம்பவம்

லாரி, பஸ், கார் என எதுவாக இருந்தாலும் விபத்து ஏற்படும் போது அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் தப்பும் போது மிகவும் தாறுமாறாக ஓடும் ரேஸ் கார்கள் ஓட்டி அதில் சாம்பியன் பட்டம் பெற்ற அஸ்வின் அத்தகைய முயற்சியை எடுக்காமலா இருந்திருப்பார்.

4 ஏர்பேக்குகள்

4 ஏர்பேக்குகள்

அஸ்வின் சுந்தர் பயணித்த காரானது பிஎம்டபிள்யூ இசட் 4 வகையாகும். இதன் விலை சுமார் ரூ.78 லட்சமாகும். இருவர் மட்டுமே பயணிக்க முடியும் (2 சீட்) இந்த காரில் 4 ஏர்பேக்குகள் உள்ளன. கார் தீப்பிடிக்காமல் இருப்பதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. கார் எதனுடனாவது மோதியதும் இந்த ஏர் பேக்குகள் விரிந்து கார் ஸ்டியரிங்கும் , டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்திருப்பவரும் முன்னோக்கி செல்லாமலும், கார் எரியாமலும் பார்த்துக் கொள்ளும்.

குடிபழக்கம் இல்லை

குடிபழக்கம் இல்லை

பிஎம்டபிள்யூ கார்களில் டீபால்டாகவே இந்த ஏர்பேக்குகள் வருகின்றன. இதன் மதிப்பே லட்சங்களாகும். இந்நிலையில் அஸ்வினுக்கு குடிபழக்கம் இல்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் காரை தாறுமாறாக ஓட்டியதற்கும் வாய்ப்பில்லை.

முன்விரோதம்

முன்விரோதம்

கார் நிச்சயம் தானாக தீப்பிடித்ததற்கான வாய்ப்பு இல்லை என்கிறார்கள். 2 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அஸ்வினுக்கு ஏதேனும தொழில் போட்டி இருந்திருக்குமா? அல்லது அவருக்கோ அவரது மனைவிக்கோ விரோதிகள் யாரேனும் இருந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை தொடங்கியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Car Racer Ashwin Sundar's BMW Z4 Car was hit in the tree and got fire in Chennai Pattinapakkam. He and his wife were died. What is the reason behind this expensive car accident?
Please Wait while comments are loading...