For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடக்கி வைத்த கோபத்தை காட்ட ஆர்.கே.நகர் மக்களுக்கு அரிய வாய்ப்பு! செய்வார்களா.. அவர்கள் செய்வார்களா?

சசிகலாவும், தினகரனும் கூறியதை போல இதுதான் மக்கள் விரும்பிய ஆட்சியா என்பதை தீர்மானிக்கப்போகும் நாள்தான் ஏப்ரல் 12.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எந்த தொகுதி மக்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு ஆர்.கே.நகர் மக்களுக்கு கிடைத்துள்ளது. ஏப்ரல் 12ம் தேதி அந்த வாய்ப்பை மக்கள் பக்காவாக பயன்படுத்துவார்களா என்று நகத்தை கடித்தபடி காத்திருக்கிறார்கள் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும்.

"இது மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஆட்சி..", "ஜெயலலிதாவுக்குத்தான் மக்கள் ஓட்டுப்போட்டு அதிமுகவை அரியணைக்கு திரும்பவும் கொண்டுவந்தனர்..", "சசிகலா மற்றும் அவரது குடும்ப ஆட்சியை மக்கள் விரும்பவில்லை", என்பது போன்ற வார்த்தைகள் கடந்த சில வாரங்களாக தமிழக மக்களின் காதுகளில் ரீங்காரமாக சுற்றிக் கொண்டுள்ளது.

எதிர்க்கட்சியான திமுக மட்டுமின்றி, அதிமுக எங்களுக்குத்தான் சொந்தம் என்று பங்காளிச் சண்டை போட்டுக்கொள்ளும் பன்னீர்செல்வம் தரப்பும் இதையேத்தான் கூறுகிறது.

உண்மை தெரிந்துவிடும்

உண்மை தெரிந்துவிடும்

இவர்கள் அத்தனை பேரும் கூறுவது உண்மைதானா.. அல்லது சசிகலாவும், தினகரனும் கூறியதை போல இதுதான் மக்கள் விரும்பிய ஆட்சியா என்பதை தீர்மானிக்கப்போகும் நாள்தான் ஏப்ரல் 12. எப்படி உத்தர பிரதேச தேர்தல் மோடி அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கபோகும் தேர்தலோ அதைபோல ஆர்.கே.நகர் தேர்தல் தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.

மக்கள் சக்தி

மக்கள் சக்தி

இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டால், சசிகலாவும், தினகரனும் கூறியதைப்போல, மக்கள் ஆதரவு அவர்களுக்குத்தான் இருக்கிறது என்பது நிரூபணமாகும். ஒருவேளை தோல்வியடைந்தால், மக்கள் சக்திக்கு முன்பாக, பணமோ, பகட்டோ, நாடகங்களோ எடுபடாது என்பது அரசியல்வாதிகளுக்கு முகத்தில் அறைந்ததை போல உரைக்கும்.

இடைத்தேர்தலாச்சே

இடைத்தேர்தலாச்சே

தமிழக வாக்காளர்கள், இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற பொது விதியை மாற்றியமைக்க 200 சதவீத வாய்ப்பு ஆர்.கே.நகரில் காத்திருக்கிறது. வழக்கமான இடைத்தேர்தல் இது கிடையாது. இப்போது ஆளும் கட்சியே இரண்டாக உடைந்து கிடக்கிறது. இதை அறுவடை செய்வதில் வெற்றிபெறப்போவது ஸ்டாலினா அல்லது ஓ.பன்னீர்செல்வமா என்பது எதிர் கட்சி அல்லது எதிரணியின் தலைவலி. வெற்றி பெறுவது மட்டுமே சசிகலா தரப்பு அதிமுக ஜீவித்திருக்க எஞ்சியுள்ள ஒரே வழி.

பணம் இருக்கே

பணம் இருக்கே

பணத்தை விட்டு எறிந்தால், பிரியாணியையும், மதுபான பாட்டிலையும் தூக்கிப்போட்டால் ஓட்டை அவர்களுக்கே மக்கள் போடுவார்கள் என்பது அரசியல்வாதிகள் சமீபகாலங்களாக நக்கலாக பேசும் வார்த்தை. அதே பார்முலாவை பயன்படுத்தி, அரசு அதிகாரம் மொத்தத்தையும் ஈடுபடுத்தி வெற்றியை பறிக்கவே ஆளும் தரப்பு எத்தனிக்கும். இத்தனையும் மீறி, மக்கள், திருப்பியடித்தால் வரலாறு உள்ளவரை ஆர்.கே.நகரும் மனதில் நிற்கும்.

கற்றுக்கொண்ட வித்தையை இறக்கும்

கற்றுக்கொண்ட வித்தையை இறக்கும்

தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்களையே ஊருக்குள் விடாமல் துரத்தியடிக்கும் சம்பவங்களை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் ஆளும் கட்சிக்கு நிச்சயம் தலைவலிதான். எனவே சாம, பேதம் என அனைத்தையும் பயன்படுத்த அசராமல் களமிறங்கும் ஆளும்கட்சி என்பதே அனைவரின் கணிப்பு.

முதல்வருக்கே பாதுகாப்பில்லை

முதல்வருக்கே பாதுகாப்பில்லை

ஆண்டுகொண்டிருந்த ஒரு பெண் முதல்வர் எப்படி இறந்தார் என்பதையே பல மாதங்களாக மறைத்து மர்மமாக்கி, அச்சுறுத்தும் சூழலை ஏற்படுத்திய ஒரு ஆட்சிக்கு பாடம் கற்பிக்க இதைவிட நல்ல வாய்ப்பு மக்களுக்கு இறுக்காது. அதுவும், அந்த முதல்வர் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கே அந்த வாய்ப்பு முதலில் கிடைத்துள்ளது, திறந்திருக்கும் சொர்க்க வாசலை போன்றது.

மக்களை மதிக்காத எம்.எல்.ஏக்கள்

மக்களை மதிக்காத எம்.எல்.ஏக்கள்

122 எம்.எல்.ஏக்களை விடுதியில் அடைத்து வைத்து தொகுதி மக்களின் கோரிக்கையை புறம் தள்ளி அவர்கள் விருப்பத்திற்கு எதிராக வாக்களிக்கச் செய்தவர்களுக்கு மக்கள் சக்தியை காண்பிக்க இதைவிட ஒரு வாய்ப்பு இனியும் கிடைக்காது. சூட்டோடு சூடாக, மக்களுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு சூடு வைக்க ஆர்.கே.நகர் மக்களுக்கு இதோ, ஒரு அரிய வாய்ப்பு.

English summary
What the R.K.Nagar constituency people should do when the by election held?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X