For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை வெள்ளம் சென்னையில் எழுதிய கண்ணீர்க் கவிதை...!

Google Oneindia Tamil News

சென்னை: நெஞ்சம் நிமிர்த்தி பீடு நடை போட்டு வந்த சென்னையை ஒரு மழை வந்து இப்படி மடக்கி் போடும் என யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை.

நிமிர்ந்து பார்ப்பதற்குள் அத்தனை பேரையும் மூழ்கடித்துப் போய் விட்டது மழையும், வெள்ளமும்.

வரலாறு காணாத மழை தண்ணீரில் எழுதிய அந்தக் கண்ணீர்க் கவிதையிலிருந்து சில துளிகள் இங்கே..!

ஊரெல்லாம் நீர்க்கோலம்

ஊரெல்லாம் நீர்க்கோலம்

வீடு எது, ரோடு எது, சாலை எது என்றே தெரியாமல் ஊரெல்லாம் நீர்க்கோலம்.

நீர் புகுந்த சென்னை

நீர் புகுந்த சென்னை

விண்ணிலிருந்து பார்த்தால் கான்க்ரீட் காடாக தோன்றும் சென்னை நீர் நகரமாக மாறி நின்ற சோகம் இது.

நீர் திவலைகளுக்கு மத்தியில்

நீர் திவலைகளுக்கு மத்தியில்

நீர் நகரமாக மாறிப் போன சென்னையில் நீருக்கு மத்தியில் மிதந்து, நடந்த அந்த நாட்கள்..!

நீரும் நினைவும்

நீரும் நினைவும்

காப்பாற்ற யார் வருவார்.. மீளுமா இந்த உயிர் என்ற அளவுக்கு மக்களை மிரட்டிப் போன அந்த மழை நாளின் ஒரு சோகத் துளி இது.

கடலையும் புரட்டிப் போட்ட பெரு வெள்ளம்

கடலையும் புரட்டிப் போட்ட பெரு வெள்ளம்

கடலுக்கே சவால் விட்டு சென்னை நகர சாலைகளை நீர் மூழ்கடித்த அந்த சோக காட்சிகளில் ஒரு சாட்சி.

குடைக்குள்ளும் மழை

குடைக்குள்ளும் மழை

வெயிலுக்கு மட்டுமே குடை பிடித்துப் பழக்கப்பட்ட சென்னை மக்கள் மழையில் குடையோடு குடையாக மிதந்த காலம் இது. குடைக்குள்ளும் மழை வந்து குலை நடுங்க வைத்த நாட்கள்!

இதிலும் போகலாம்

இதிலும் போகலாம்

மண் அள்ளவும், பள்ளம் தோண்டவும் மட்டும்தானா இவை.. எங்களையும் சற்றே கொண்டு போய் பத்திரப்படுத்து.. கிடைத்த வாகனத்தில் எல்லாம் தப்பி மீண்ட சென்னை மக்கள்!

மழை பார் மழை பார்

மழை பார் மழை பார்

போதும் எங்களை விட்டு விடு என்று சென்னை மக்களை மருள வைத்த மழை.. !

எங்கே செல்லும் இந்தப் பாதை

எங்கே செல்லும் இந்தப் பாதை

போகும் வழியெல்லாம் நீர்.. போகும் வழி எங்கே.. போகும் வரை போவோம்!

நீர் வழிப் பாதையில்

நீர் வழிப் பாதையில்

சாலைகளில் சர் புர்ரென்று வாகனங்களில் பறந்த மக்களுக்கு நீர் ஸ்பீட் பிரேக்கராக மாறி நடக்க வைத்த அந்த மறக்க முடியாத நாட்கள்!

நிறுத்தி நிதானமாக

நிறுத்தி நிதானமாக

சற்றும் பொறுமை இல்லாமல் வாகனங்களில் பறந்து திரிந்த மக்களை பொறுமை என்றால் என்ன என்று புரிய வைத்த மாமழை!

இனியும் வேண்டாம் இந்த அலங்கோலம்

இனியும் வேண்டாம் இந்த அலங்கோலம்

வெள்ளம் பாய்ந்த ஆற்றுக்கு அருகில் வீட்டுக்குள்ளும் புகுந்து வெள்ளத்திலிருந்து மீள .. வீட்டுக்கு மேலே அடைக்கலமாக மக்கள்.. இனியும் வேண்டாம் இந்த அவலம்.

மீட்க வந்து மூழ்கிய சோகம்

மீட்க வந்து மூழ்கிய சோகம்

மீட்க வந்த வாகனங்களும் மூழ்கிய சோகம் இது.

படகோடு சில நேரம்

படகோடு சில நேரம்

வாழக்கைப் படகு எப்போதும் சீராக இருக்காது என்பதை சென்னை மக்களுக்கு சொல்லிக் கொடுத்த மழை!

எனக்கெங்கே வழி

எனக்கெங்கே வழி

ஊரெல்லாம் வீடு..என் பாதெயங்கும் நீ நின்றால் நான் எங்கே போவது.. என்று சொல்லிச் சொல்லிச் சீறிப் பாய்ந்த வெள்ளம் பாதித்த சென்னை.

வேறு இடம் நோக்கி

வேறு இடம் நோக்கி

வெள்ளத்தில் சிக்கி கிடைத்த பொருட்களுடன் வேறு இடம் நோக்கி இடம் பெயர்ந்த அப்பாவி மக்கள்.

அப்பாவின் தோளில்

அப்பாவின் தோளில்

அப்பாவின் தோளில் ஏறி திருவிழா பார்த்த காலம் போய்.. வெள்ளத்தில் நீந்தி வேறு இடம் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பிள்ளைகள்!

ஊரெங்கும் உன் ஆட்டம்தான்

ஊரெங்கும் உன் ஆட்டம்தான்

பேயாட்டம் போட்ட வெள்ளத்தின் சதிராட்டத்தில் சிக்கிய சென்னை

நீந்திய ரயில்கள்

நீந்திய ரயில்கள்

கிழக்கே போகும் ரயில்கள் எல்லாம் இந்த நீரில் ஊர்ந்து போக முடியாமல் புகை நிறுத்தி அமைதி காத்த அந்தத் தருணம்.

அடங்காத ஆறு

அடங்காத ஆறு

அடங்காத ஆறு.. அருகே ஒரு ஊர்.. ஆர்ப்பரித்த வெள்ளம்.. அவலத்தில் சிக்கித் தவித்த மக்கள்.. !

தாண்டிப் போக பாலம் இல்லையே

தாண்டிப் போக பாலம் இல்லையே

நீர் நிலைகளைத் தாண்டிப் போகத்தான் பாலம். இங்கோ.. பாலமே நீரில் மூழ்கி விட்டதே.. எங்கே போவது.. எப்படிப் போவது.!

மீண்டும் வருமா?

மீண்டும் வருமா?

மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்ற இந்த வெள்ளம் மீண்டும் வேண்டாம்.. மறுபடியும் வரவே வேண்டாம்.. !

English summary
The year 2015 will be a memorable one to the peopel of Chennai. The fury of the rain and the floods made a big mark on the minds of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X