பிக்பாசிலிருந்து இன்று வெளியேறப்போவது யார் தெரியுமா? லீக்கானது வைரல் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து அடுத்து நடையை கட்டபோவது யார் என்ற கேள்விக்கு இன்றைய நிகழ்ச்சிக்கு முன்னரே நமீதா என்ற விடை தற்போது ஆதாரத்துடன் வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, கணேஷ், நமீதா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டனர். அவர்களுள் ஓவியாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக அவர் பிக்பாஸ் வீட்டில் தங்க வேண்டும் என்று மக்கள் அவருக்கு வாக்களித்தனர். இதனால் ஓவியா எலிமினேஷனில் இருந்து தப்பி விட்டதாக கமல் நேற்றைய நிகழ்ச்சியில் அறிவித்தார்.

 Who will be eliminated from Bigg boss?

மீதமுள்ள இருவரில் யார் வெளியேறுவார்கள் என்பது குறித்து இன்று இரவு நடைபெறும் நிகழ்ச்சியில் கமல் தெரிவிப்பார். இதனிடையே இன்றைய ப்ரோமோவில் எலிமினேட் ஆகும் போட்டியாளரின் பெயரை படிக்க முற்படும் போது நமீதா அணிந்த ஆடையிலேயே விழா மேடையில் அவர் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. நேற்றுதான் நிகழ்ச்சி சூட்டிங் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகரில் ஒருவர்தான் படத்தை லீக் செய்ததாக சமூக வலைத்தள தகவல்கள் கூறுகின்றன.

இந்த படம் உண்மையெனும்பட்சத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதாவே எலிமினேட் செய்யப்படுவார் என்று அடித்துச் சொல்கிறார்கள் ரசிகர்கள். மேலும் கணேஷ் வெங்கட்ராமன் நியாயமாக செயல்பட்டு வருவதால் அவர் வெளியேற வாய்ப்பில்லை என்று கணிக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் சிண்டுமுடியும் வேளைகளில் நமீதா ஈடுபட்டு வருவதால் மக்களின் எதிர்ப்பையே அவர் சம்பாதித்துள்ளதால் அவர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Who will be nominated from the Bigg boss family? Either Namitha or Ganesh Venkatraman. A viral photo with eliminated contestant is roaming in social medias.
Please Wait while comments are loading...