For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றிடத்தை நிரப்ப போவது யார்?.. ஆண்டவரா இல்லை அருணாசலமா??

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதே போல் கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்துள்ளதால் வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் குறித்து பேசிய போதெல்லாம் தமிழகத்தில் ஜெயலலிதா இல்லாத நிலை, கருணாநிதி செயல்படாத நிலை ஆகியவற்றாலேயே இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று பேசப்பட்டது.

இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் கடந்த மாதம் கட்சி ஆரம்பித்தார். இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிகாந்த் நேற்று மாலை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் விழாவில் கலந்து கொண்டார்.

அதான் வருகிறேன்

அதான் வருகிறேன்

அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதால் வருகிறீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். ஆமாயா வெற்றிடம் இருக்கிறது. அதனால் வருகிறேன் என்றார்.

கூட்டணி

கூட்டணி

கமலும், ரஜினியும் நண்பர்கள் என்றாலும் இருவரது அரசியலும் வெவ்வேறு திசையில் பயணிக்க கூடிய வகையில் உள்ளது. இருவரும் கூட்டணி வைப்பார்களா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று கூறியுள்ளனர்.

மாஸ் ஹீரோஸ்

மாஸ் ஹீரோஸ்

ரஜினியும் கமலும் மாஸ் ஹீரோஸ். இருவரும் கட்சி ஆரம்பித்தாலும் யார் ஜொலிப்பார்கள் என்பது சினிமாவை போல் மக்கள் கையில் உள்ளது. இவர்களது கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை பார்த்தே மக்கள் மதிப்பிடுவர்.

யார் நிரப்புவது

யார் நிரப்புவது

அப்போதுதான் தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப போவது ரஜினியா கமலா என்பது தெரியவரும். அதற்கு அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலோ, மக்களவை தேர்தலோ, சட்டசபை தேர்தலோ கை கொடுக்கும். அதில் மக்கள் மனதை கவர்பவர்கள் யார் என்று தெரியவரும். அந்த நேரத்தில் நல்ல தலைவனை மக்கள் தேர்ந்தெடுப்பர்.

English summary
Rajinikanth says that yes here there are some vaccum for good leader in Tamilnadu.The Vaccum will be first filled by Rajini or Kamala hassan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X